பதிவு செய்த நாள்
02 ஜன2013
08:22

சேலம்: ஓட்டல்கள்,தொழிற்சாலைகளில், பயன்படுத்தப்படும், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை, புத்தாண்டின், முதல் நாளான நேற்று, 52 ரூபாய் குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், வர்த்தக காஸ் சிலிண்டர் என, இரண்டு வகையான, சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. வர்த்தக நிறுவனங்களில், பயன் படுத்தப்படும், 19 கிலோ, எடை கொண்ட சிலிண்டர் விலை, ஒவ்வொரு மாதத்தின், முதல் நாள் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை, வர்த்தக சிலிண்டர்களின் விலை, மாதத்துக்கு, ஓர் விலை ஏற்றம் என, அரங்கேற்றப்பட்டது. புத்தாண்டின், முதல் நாளான நேற்று, வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், சிலிண்டர் விலையில், திடீர் சரிவு ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு, வழங்கப்படும், 14 கிலோ, எடை கொண்ட சிலிண்டர் விலை, 39 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் வரை, 1,299.50 ரூபாய்க்கு, வழங்கப்பட்டு வந்தது. இந்த விலையில், 39 ரூபாய் குறைக்கப்பட்டு, நேற்று முதல், 1,260.50 ரூபாய்க்கு, வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், வர்த்தக சிலிண்டர், 1,817.50 ரூபாய்க்கு விற்றது, 52 ரூபாய் குறைந்து, 1,765.50 ரூபாய்க்கு, வினியோகிக்கப்பட்டது. வீடுகளில் பயன்படுத்தப்படும், மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன், வினியோகம் செய்யப்படும், 14.2 கிலோ, எடை கொண்ட சிலிண்டர் விலையில், எவ்வித மாற்றம் இன்றி, 401 ரூபாய்க்கு, வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|