பதிவு செய்த நாள்
02 ஜன2013
08:48

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் வரத்து குறைவால், மலை வாழைக்காய் விலையுயர்ந்துள்ளது. இது விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கீழ்பழநி மலைப்பகுதியில் மலை வாழை 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. முடிக்கொத்து, செந்தாழை உள்ளிட்ட நோய் பாதிப்பு, வனவிலங்கு தாக்குதல் என இவ்விவசாயம் வெகுவாக பாதித்துள்ளது . பருவ மழை பொய்த்ததால் திரட்சியான காய்கள் வரத்து குறைந்ததுள்ளது. இதனால் 400 காய்கள் கொண்ட முதல் தர (பொதி) ரூ.3,600க்கு ஏலம் போகிறது. இதுகுறித்து கமிஷன்கடை உரிமையாளர் மகேந்திரன் கூறுகையில், ""வாரத்திற்கு 1 லட்சம் காய்கள் வந்த சந்தையில், தற்போது பாதியாகியுள்ளது. போதிய மழையின்மையே இதற்கு காரணமாகும். சில வாரங்களாக வரத்து குறைவால் காய்கள் விலை உயர்ந்துள்ளது. காய்களுக்கு தகுந்தாற்போல் பொதி ஒன்றுக்கு ரூ.2000 முதல் 4 000 வரை ஏலம் போகிறது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|