பதிவு செய்த நாள்
02 ஜன2013
09:07

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் ( 9.03 மணியளவின் ) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.70 புள்ளிகள் அதிகரித்து 19638.51 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 25.95 புள்ளிகள் குறைந்து 5924.90 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், புத்தாண்டின் தொடக்க தினமான செவ்வாய்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. அமெரிக்காவின், நிதி சீரமைப்பு திட்டத்தில் நிதான போக்கு கடைபிடிக்கப்படும் என்ற செய்தி வெளியானதைஅடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. 'சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.79 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது. இதர ஆசிய நாடுகளின், பெரும்பாலான சந்தைகளுக்கு, நேற்று, பொது விடுமுறை விடப்பட்டிருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|