பதிவு செய்த நாள்
02 ஜன2013
10:59

நோக்கிய நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் லுமியா 920 பொங்கலுக்கு அறிமுகமாகிறது. புதிய போன் விண்டோஸ் 8-ன் மொபைலுக்கான இயங்குதளத்தின் மூலமாக செயல்படக்கூடியது. பிஜிஆர் இந்தியா இணையதளமானது புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நோக்கியா லுமியா 920 போன்களுக்கான அதிகாரப்பூர்வ விற்பனையாளர் “செலக்ட் சிட்டிவாக்” என்ற தென் டில்லியை சேர்ந்த ஒரு வியாபார மையம் தானாம். அந்த வியாபார மையம் தற்பொழுது நோக்கியா லுமியா 920 போன்களுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாம். இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் வரும் ஜனவரி 14 முதல் கடைகளில் கிடைக்குமாம். இந்த போன்களுக்கான “டெமோ” சாதனங்கள் ஜனவரி 3 முதல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா லுமியா 920னில் 4.5 அங்குல தொடுதிரை, HD என்றழைக்கப்படும் உயர்தர வீடியோ, 8.7 எம்பி கேமரா, 1.5 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,1 ஜிபி ரேம், 32 ஜிபி உள்நினைவகம், விலை ரூ.38,000லிருந்து ரூ.40,000க்குள் இருக்கலாம் என தகவல்கள் வெளிவருகின்றன.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|