பதிவு செய்த நாள்
03 ஜன2013
01:27

கொச்சி:தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதை அடுத்து, தமிழகம் மற்றும் கேரளாவில், கொப்பரையின் விலை அதிகரித்துள்ளது.கேரளாவில், ஒரு குவிண்டால் கொப்பரையின் விலை, 4,700 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும், இதன் விலை, 4,600 ரூபாயிலிருந்து, 4,900 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சந்தைகளுக்கு கொப்பரை வரத்து, குறைந்துள்ளதை அடுத்து, கேரளாவில் ஒரு கிலோ கொப்பரையின் விலை, 66.50 ரூபாயிலிருந்து, 69 ரூபாயாகவும், தமிழகத்தில் இதன் விலை, 65 லிருந்து, 67 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.வட மாநிலங்களில், கொப்பரைக்கு தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாளொன்றுக்கு, 300 டன் கொப்பரை வெளி மாநிலங்களுக்கு செல்வதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். கேரளாவில், தேங்காய் உற்பத்தி மிகவும் சரிவடைந்துள்ளது.இந்த நிலை, வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும், இதன் காரணமாகவே, கொப்பரை விலை உயர்ந்துள்ளதாக, தமிழக வியாபாரி ஒருவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|