குவிண்டால் கொப்பரைரூ.4,900 ஆக அதிகரிப்புகுவிண்டால் கொப்பரைரூ.4,900 ஆக அதிகரிப்பு ... இணையதள வணிகம் ரூ.2 லட்சம் கோடியாக உயரும் இணையதள வணிகம் ரூ.2 லட்சம் கோடியாக உயரும் ...
வாகன விற்பனையில் சரிவு: சலுகைகளால் பயனில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2013
01:41

சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை, ஒட்டு மொத்த அளவில், 2 சதவீதம் சரிவடைந்துள்ளது.முன் எப்போதும் இல்லாத அளவில் சலுகைகள் அறிவிப்பு மற்றும் பல புதிய மாடல் கார்கள் அறிமுகம் ஆகியவற்றிற்கு இடையிலும், இவற்றின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் :சென்ற 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 9.6 சதவீதம் சரிவடைந்து, 26,697 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் இதே மாதத்தில், 29,516 ஆக அதிகரித்து காணப்பட்டது.மேலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை, 21.8 சதவீதம் சரிவடைந்து, 9,039 என்ற எண்ணிக்கையிலிருந்து, 7,067 ஆக குறைந்துள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் கார் விற்பனை, 24 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 15,948 லிருந்து, 12,071 ஆக சரிவடைந்துள்ளது.அதேசமயம், ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை, 296 சதவீதம் அதிகரித்து, 1,072 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,242 ஆக உயர்ந்துள்ளது. போர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,978 லிருந்து, 6,517 ஆக அதிகரித்துள்ளது.
மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை, உள்நாட்டில், 18 சதவீதம் உயர்ந்து, 19,341 என்ற எண்ணிக்கையிலிருந்து, 22,761 ஆக அதிகரித்துள்ளது.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், மேற்கண்ட நிறுவனங்களின் கார் விற்பனை, ஒட்டு மொத்த அளவில், 1.9 சதவீதம் சரிவைக் கண்டு, 80,894 லிருந்து, 79,355 ஆக குறைந்துள்ளது.இதே போன்று, மதிப்பீட்டு மாதத்தில், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின், இருசக்கர வாகன விற்பனை, 9.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,67,905 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,51,735 ஆக சரிவடைந்து உள்ளது.
அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 0.25 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டு, 5,40,276 லிருந்து, 5,41,615 ஆக சற்று அதிகரித்துள்ளது.இருப்பினும், மேற்கண்ட இரு நிறுவனங்களின் வாகன விற்பனை, ஒட்டு மொத்த அளவில், 2.1 சதவீதம் சரிவடைந்து, 7,08,181 லிருந்து, 6,93,350 ஆக குறைந்துள்ளது.
வட்டி விகிதம்:எரிபொருட்கள் விலை அதிகரிப்பு, கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு போன்றவற்றால், பல்வேறு நிறுவனங்களின் வாகன விற்பனை குறைந்து போயுள்ளது என, மகிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (வாகன பிரிவு) பிரவீன் ஷா தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)