பதிவு செய்த நாள்
03 ஜன2013
10:44
காரில் பொருத்தப்படும் உபகரணங்கள் காரின் வெளித்தோற்றத்திற்கும், உட்புற வசதிக்கும் மிகவும் துணிபுரியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சாதாரண காரையும் மிகக் கவர்ச்சியாகவும் சொகுசாகவும் மாற்றக்கூடியது கார் அசெசரீஸ் என்றழைக்கப்படும். இவ்வுபகரணங்கள் காரின் அழகையும் வசதியையும், பாதுகாப்பையும் பெருக்கக்கூடியது. இப்பாகங்கள் கார் ஹெட்லைட், ரியர் வ்யூ மிர்ரர், சீட் கவர், கார் ஸ்டீரியோ, ஸ்டியரிங் வீல் கலர், டி.வி.சில்லர் என நீண்ட
பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். காரை தங்கள் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்ப அலங்கரிப்பவர்கள் நிறைய உண்டு. இதற்காக அதிகம் செலவு வதை பொருட்படுத்தாவர்களும் உண்டு என்றே சொல்லலாம். இவற்றில் சிலவற்றைப்பற்றி கீழ்வருமாறு காணலாம்.
கார் விளக்குகள்
காரின் பாதுகாப்பு அம்சமாகவும், வெளிப்புற அழகை எடுத்துக் காட்டக் கூடியதாக விளங்குவது ஹெட்லைட்கள். ஹெட்லைட்களில் பலவிதங்கள் உண்டு. பல வடிவங்களிலும் ஹேலோஜென், (எல்இஐ) போன்று பலவிதமான பல்புகள் பொருத்தப்பட்டும் இவை வருகின்றன. காரின் உட்புற அழகை வெளிப்படுத்துவது உட்புற கூரையில் அமைக்கப்படும் விளக்குகள் ஆகும். இரவு நேர பயணத்திற்கும், பனிமூட்ட பாதைகளிலும் உதவும் ஃபாக்லாம்ப், அதிக வெளிச்சத்தை பாய்ச்சக்கூடிய ட்ரைவிங் லைட், பாரபோலிக் ஹெட்லைட்டை விட அதிக அடர்த்தியான வெளிச்சத்தை கொடுக்கும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட், வெண்மையான வெளிச்சத்தை உமிழும் ஹைஇன்டென்சிட்ஐ டிஸ்சார்ஜ் (எச்ஐடி)லைட், பலவித நிறங்கள் வடிவங்களில் கிடைக்கும். பின்புற டெயில் லாம்ப்கள் என்று இவ்விளக்குகளின் பட்டியலும் நீளமானதே. நியான் விளக்குகள் பல நிறங்களில் ஜொலிக்கக்கூடியதாக லைசன்ஸ் ப்ளேட் ஃப்ரேம், ஸ்பீக்கர் ரிங், ஷஃப்ட் நாய் போன்ற தோற்றத்தை கொடுக்கக் கூடியதாகும்.
கார் மியூசிக் சிஸ்டம்
கார் பயணத்தை மேலும் இனிமையாக்க உதவுவதே கார் ஸ்டீரியோ சிஸ்டம் தான். கார் மியூசிக் சிஸ்டம் என்பது ஹெட் யூனிட், ஆம்ப்ளிஃபயர், ஸ்பீக்கர், ஊஃபர் மற்றும் ஆக்சிலியரி இன்புட் டிவைசஸ் போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.
அதிக செயல்திறன் உள்ள ஊப்பர்கள் இளைஞர்களின் தேர்வாக எப்பொழுதும் இருக்கும். சோனி, பானசோனிக், கென்வும், பயனீர், ப்ளாபான்க் போன்றவை சிறந்த ஒலி அமைப்பு கொண்ட மியூசிக் சிஸ்டங்கள் எனலாம். இசையில் நாட்டம் கொண்டவர்கள் கார் மியூசிக் சிஸ்டத்தின் தரத்தில் எந்த சமசரமும் செய்துக் கொள்ளாமல் சிறந்ததாக தேர்ந்தெடுப்பது நல்லதாகும்.
சீட் கலர்
காரின் கதவை திறந்ததும் நம்மை வரவேற்பது சீட் கவர்கள் தான். அவைகளின் நிறத்தையும் துணியின் தன்மையையும் பொருத்து இருப்பது காரின் தோற்றம் கம்பீரமாகவோ, கவர்ச்சியாகவோ, மிருதுவாகவோ, பளிச்சென்றோ தோன்றும். சீட்
கவருக்கென சாஃப்ட்ப்லெதர், காட்டன், பாலியேஸ்டர், வெலொர், அக்ரிலிக் ஃபர் நியோப்ரீன் என்று பலவிதமான பொருட்கள் கிடைக்கின்றன. துவைக்கக் கூடியதாகவும், சுலபமாகவும் போடக்கூடியதாகவும் கச்சிதமாக பிடிக்கக் கூடியதாகவும் சைட் ஏர்பேக்கள் பொருத்தப்பட்டும், குஷன் தன்மைக்காக கூடுதல் ஃபோம் அமைக்கப்பட்டும், சீட் கவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப கிடைக்கிறது.
உட்புற அணிகலன்கள்
உட்புற வசதிக்கும் அழகிற்கும் ஏற்ற பல சிறு சிறு பொருட்கள் கிடைக்கின்றன. தரையில் போடும் கார் மாட்கள், கார் கடிகாரம் கண்ணாடிகள், வாசனை திரவங்கள் அல்லது மெழுகுகள் கொண்ட பாட்டில்கள் சீட்களுக்கு மேல் பொருத்தும் ஹெட் ரெஸ்ட், ஸ்டியரிங் கவர்கள் போன்றவைகளை காரின் நிறம், இடவசதி, அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுத்தால் மிக நேர்த்தியாக இருக்கும்.
வெளிப்புற அணிகலன்கள்
வெளிப்புற தோற்றத்தை எடுத்துக்காட்டக் கூடிய பொருட்களாகப் ஃபாக் லேம்ப், க்ராஃபிக்ஸ், மட்ஃப்ளாப்ஸ், வென்ட் வைசர், ஜன்னல் கவர் அல்லது திரைகள், ஹெட்லைட் கவர், ஸ்ப்ளாஷ் கார்ட், சன்ரூஃப் டிஃப்லெக்டர், டெயில் லைட் கவர் போன்றவைகள் இருக்கின்றன. அழகாய் கட்டிய வீட்டிற்கு எவ்வளவு அலங்காரம் செய்தாலும் அலுக்காததை போல நாம் ஆசையாய் வாங்கும் காருக்கும் எவ்வளவு அலங்காரம் செய்தாலும் அலுக்கவே அலுக்காது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|