பதிவு செய்த நாள்
03 ஜன2013
14:07
பியாஜியா இந்தியா நிறுவனம், வெஸ்பா எல்எக்ஸ் 125 என்ற புதிய ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி, இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. இந்த ஸ்கூட்டரில், 125 சிசி ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3 வால் ஹெட் அம்சம் கொண்டது. ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்களில், மிகவும் சக்தி வாய்ந்தது என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்கூட்டருக்கு, 2 ஆண்டு/ 24,000 கி.மீ., என்ற அளவில், வாரன்டி வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த வாரன்டி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என, இரு தரப்பினருக்கும் பொருந்தும். இரண்டு பேக்கேஜ்களில், இந்த வாரன்டி சலுகை அளிக்கப்படுகிறது. இதன்படி, புதிய வாடிக்கையாளர், 400 ரூபாயும், பழைய வாடிக்கையாளர், 480 ரூபாயும் செலுத்தினால், ஒரு ஆண்டு/12,000 கி.மீ., என்ற நீட்டிக்கப்பட்டு வாரன்டி சலுகை அளிக்கப்படும். அதே நேரத்தில், புதிய வாடிக்கையாளர், 550 ரூபாயும், பழைய வாடிக்கையாளர், 625 ரூபாயும் செலுத்தினால், 2 ஆண்டு / 24,000 கி.மீ., என்ற வாரன்டி சலுகை கிடைக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|