"ஏர் - இந்தியா'வை மறுசீரமைக்கஐவர் குழு நியமனம்"ஏர் - இந்தியா'வை மறுசீரமைக்கஐவர் குழு நியமனம் ... அலைபேசி வாயிலான இணையதளபயன்பாடு 13 கோடியாக அதிகரிக்கும் அலைபேசி வாயிலான இணையதளபயன்பாடு 13 கோடியாக அதிகரிக்கும் ...
உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:47

ஹவுஸ்டன்:உலகின், 100 மெகா கோடீஸ்வர தொழிலதிபர்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 18வது இடத்தை பிடித்துள்ளார்.புளும்பெர்க் நிறுவனம், சென்ற 2012ம் ஆண்டிற்கான, உலகின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதில், மெக்சிகோவின் ஊடக சக்ரவர்த்தி கார்லோஸ் ஸ்லிம், 7,000 கோடி டாலர் சொத்துக்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், 6,000 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துக்களுடன், இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.பங்குச் சந்தை ஜாம்பவான் என, வர்ணிக்கப்படும் வாரன் பப்பெட், நான்காவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். கடந்த ஆண்டு, பல கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய போதிலும், இவரது சொத்து மதிப்பில் கூடுதலாக, 500 கோடி டாலர் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், மரச்சாமான்கள் தயாரிப்பில் களமிறங்க வரும் ஐ.கே.இ.ஏ., நிறுவனர் இங்வர் கம்பிரட், ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு, 16.6 சதவீதம் உயர்ந்து, 4,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இந்த பட்டியலில், முகேஷ் அம்பானி தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, உலகின் பணக்கார இந்தியர் என்ற சிறப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அதே சமயம், உலகின் பெருங் கோடீஸ்வரர்கள் பட்டியலில், 19வது இடத்தில் இருந்து, 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு, 2,100 கோடி டாலரில் இருந்து, 2,470 கோடி டாலராக உயர்ந்துள்ளது.உலகின், 100 பெருங் கோடீஸ்வர தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில், 15 சதவீதம் உயர்ந்து, 1.81 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)