உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம்உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம் ... அலைபேசி வாயிலான இணையதளபயன்பாடு 13 கோடியாக அதிகரிக்கும் அலைபேசி வாயிலான இணையதளபயன்பாடு 13 கோடியாக அதிகரிக்கும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் காபி உற்பத்தியில் மந்தநிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:48

பெங்களூரு:நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் காபி உற்பத்தி, 3.15 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய மதிப்பீட்டில், 3.25 லட்சம் டன்னாக இருந்தது என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.உள்நாட்டில், காபி அதிகம் விளையும் பகுதிகளில் ஏற்பட்ட, பருவம் தவறிய மழைப் பொழிவு மற்றும் பூச்சி தாக்குதல் போன்றவற்றால், இதன் உற்பத்தி சரிவடையும் என, கணிக்கப்பட்டுள்ளது. தமிழகம்இதையடுத்து, கர்நாடகாவின் காபி உற்பத்தி, 2.27 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் இதன் உற்பத்தி, 63,825 டன்னாகவும், தமிழகத்தில், 17,750 டன்னாகவும் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.காபி விளையும் பாரம்பரியம் இல்லாத பகுதிகளான, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் இதன் உற்பத்தி, 6,525 டன்னாகவும், வடகிழக்கு மாநிலங்களில், 195 டன்னாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,சென்ற 2012ம் ஆண்டின், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான, 12 மாத காலத்தில், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுணக்க நிலை காரணமாக, நம் நாட்டின் காபி ஏற்றுமதியும், 9.35 சதவீதம் சரிவடைந்து, 3.10 லட்சம் டன்னாக குறையும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. இது, கடந்த, 2013ம் ஆண்டின் இதே காலத்தில், 3.42 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூபாய் மதிப்பு அடிப்படையிலான, இதன் ஏற்றுமதி, 1.96 சதவீதம் சரிவடைந்து, 4,823 கோடி ரூபாயிலிருந்து, 4,728 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
மேலும், டாலர் மதிப்பின் அடிப்படையிலான காபி ஏற்றுமதியும், 11.19 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 104 கோடி டாலரிலிருந்து, 92 கோடி டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.இந்தியா காபி உற்பத்தியில், 7வது மிகப் பெரிய நாடாக உள்ளது. இருப்பினும், சர்வதேச காபி உற்பத்தியில், நம்நாட்டின் பங்களிப்பு, 4 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. சென்ற, 2011ம் ஆண்டில், நம்நாட்டின் காபி உற்பத்தி, 53 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை=60 கிலோ) இருந்தது.பிரேசில்சர்வதேச சந்தைகளுக்கு காபி ஏற்றுமதி மேற்கொள்வதில், இந்தியா, 5.6 சதவீத பங்களிப்புடன், 5வது மிகப் பெரிய நாடாக உள்ளது.
உள்நாட்டின் மொத்த காபி உற்பத்தியில், 70 சதவீதத்திற்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.சென்ற 2011-12ம் ஆண்டில், உலகளவில், காபி உற்பத்தியில், 33 சதவீத பங்களிப்புடன், பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து,வியட்நாம் (15.2 சதவீதம்), இந்தோனேஷியா (6.3 சதவீதம்) மற்றும் கொலம்பியா (5.9 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன என, கர்நாடகா காபி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)