உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம்உலக மெகா கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம் ... மக்களிடம் வசூலிக்கும் சேவை வரியை அரசுக்கு செலுத்த தவறினால் சிறை மக்களிடம் வசூலிக்கும் சேவை வரியை அரசுக்கு செலுத்த தவறினால் சிறை ...
அலைபேசி வாயிலான இணையதளபயன்பாடு 13 கோடியாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:52

புதுடில்லி:வரும் 2014ம் ஆண்டில், இந்தியாவில், அலைபேசி வாயிலாக, இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 13 கோடியாக அதிகரிக்கும் என, இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி பயன்படுத்துவோர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.உள்நாட்டில், கம்ப்யூட்டர், லேப்-டாப், டேப்லெட், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், இச்சாதனங்கள் வாயிலாக, இணைதளத்தை பயன் படுத்து வோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, மற்ற சாதனங்களை காட்டிலும், அலைபேசி வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அலைபேசி இணையதளம் வாயிலாக, தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, இ-மெயில், சாட், டிக்கெட் முன்பதிவு, சமூகவலைதளம், வங்கிச் சேவை போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன.அலைபேசி இணையதளத்தை பயன்படுத்தி,"வீடியோகேம்ஸ்' விளையாடுவோர் எண்ணிக்கை, 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. செய்திகள், படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை, 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.அலைபேசி வாயிலான இணையதள சேவைக்கு, மாதந்தோறும் ஒருவர் சராசரியாக, 198 ரூபாய் செலவிடுவதாக, இக்கூட்டமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில், அலைபேசி வாயிலாக, இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 8.71 கோடி என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2014ம் ஆண்டில், 50 சதவீதம் உயர்ந்து, 13 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)