பதிவு செய்த நாள்
04 ஜன2013
11:03

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்கானியா நிறுவனம், கனரக டிரக்குகள், பஸ்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், உலகளவில், புகழ்பெற்றது. 100 நாடுகளில், இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில், 2007ம் ஆண்டு முதல், எல் அண்டு டி நிறுவனத்துடன் இணைந்து, ஸ்கானியா நிறுவனம் செயல்பட துவங்கியது. 2011ம் ஆண்டு, "ஸ்கானியா கமர்ஸியல் வெஹிகல்ஸ் இந்தியா' என்ற துணை நிறுவனம் துவக்கப்பட்டது. சுரங்க பணிகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான, கனரக டிரக்குகளை உற்பத்தி செய்வதில், இந்த நிறுவனம் பிரபலமானது. இந்த சூழ்நிலையில், ஸ்கானியா நிறுவனம், "பி410' என்ற பெயரில், புதிய கனரக டிரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், கரடுமுரடான சாலைகளில் செல்லும் வகையிலும், எரிபொருள் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்<, இந்த புதிய வாகனம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ஸ்டீல் பம்பர் பாடி, வசதி கொண்டது. வலிமையான, "டோ பின்' வசதி கொண்டது. கடிமான சுரங்க பகுதிகளிலும், சிறப்பாக செல்லும் வகையில், சஸ்பென்ஷன் சிஸ்டம் வசதி கொண்டது என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|