பதிவு செய்த நாள்
06 ஜன2013
00:07

புதுடில்லி:ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, திராட்சை ஏற்றுமதி செய்வோர், இனி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் (அபெடா) பதிவு செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.அது போன்று, ரஷ்யா நீங்கலாக, இதர நாடுகளுக்கு நிலக்கடலை மற்றும் நிலக்கடலை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும், இத்தகைய பதிவு அவசியம் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலக்கடலையில், "அப்லடாக்சின்' என்ற வேதிப் பொருளின் அளவு குறித்து, ஆய்வகத்தின் சான்றிதழையும் அளிக்க வேண்டும் என, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது.தற்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே, ஏற்றுமதிக்கான ஒப்பந்த ஆவணங்களை பதிவு செய்வதும், வேதிப் பொருளின் அளவு குறித்த சான்றிதழும் அவசியமாக உள்ளது.
ரஷ்யாவுக்கான நிலக்கடலை மற்றும் நிலக்கடலை பொருட்களுக்கு, அவை ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பாக, குறிப்பிட்ட ஆய்வகங்கள் சான்றிதழ் அளிக்கின்றன. இந்த நடைமுறை தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய திராட்சைகளில், "குளோரோமெக்வாட்' என்ற ரசாயன பொருள் மிகுதியாக உள்ளதாக கூறி, அவற்றை இறக்குமதி செய்ய ஐரோப்பிய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
இதனால், திராட்சை ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், திராட்சைகள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக, மேற்கண்ட ரசாயன கலவையை பயன்படுத்துகின்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|