பதிவு செய்த நாள்
06 ஜன2013
00:12

நாட்டின் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, சர்க்கரையின் விலை உயர்த்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், உற்பத்தி செலவை ஈடு செய்யும் அளவிற்கு கூட, சர்க்கரையின் விலை இல்லாததால், இத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.மகாராஷ்டிரா :உள்நாட்டில், சர்க்கரை உற்பத்தி, தேவையை விட, அதிகமாக உள்ளது. வட மாநிலங்களில், ஒரு கிலோ சர்க்கரையின் விலை, 33 ரூபாய் (ஆலை விலை) என்ற அளவில் உள்ளது.
அதேசமயம், அங்குள்ள ஆலைகளுக்கு, ஒரு கிலோ சர்க்கரைக்கான உற்பத்தி செலவு, 34-36 ரூபாய் என்ற அளவில் உள்ளது.இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், ஒரு கிலோ சர்க்கரையின் விலை, 31 ரூபாய் (ஆலை விலை) என்ற அளவில் உள்ளது. இம்மாநிலங்களில், ஒரு கிலோ சர்க்கரைக்கான உற்பத்தி செலவு, 30 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்படும் இழப்பை தடுத்து நிறுத்தும் வகையில், மத்திய அரசு, இதன் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், வெளிச் சந்தையில், விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கால அளவை நீட்டிக்க வேண்டும்.அனுமதி:தற்போது, ஆலைகள் வெளிச் சந்தையில், சர்க்கரை விற்றுக் கொள்வதற்கு மார்ச் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம், மே மாதம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா), மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸுக்கு கடிதம் எழுதி உள்ளது.இதில், 'லெவி' அல்லாத சர்க்கரையை விற்பனை செய்ய அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை அனுமதி அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக, சர்க்கரை பருவத்தின் முதல் ஆறு மாத காலத்தில், மத்திய அரசு, சராசரியாக, 90.40 லட்சம் டன் சர்க்கரையை விற்பனைக்கு அனுப்பி வந்தது.
இந்நிலையில், நடப்பு 2012-13ம் பருவத்தில், மத்திய அரசு, 1.08 கோடி டன் சர்க்கரையை விற்பனைக்கு அனுப்பி உள்ளது. இது, சராசரி அளவை விட, 20 சதவீதம் அதிகமாகும். கொள்முதல்:இதனால், வெளிச் சந்தையில் சர்க்கரையின் விலை மிகவும் சரிவடைந்துள்ளது என, 'இஸ்மா' தெரிவித்துள்ளது.
பொதுவாக, ரேஷன் கடைகளில் விற்பனைக்காக அனுப்பப் படும் (லெவி), சர்க்கரையை அரசு, சர்க்கரை ஆலைகளிலேயே வைத்திருக்கும். இந்த சர்க்கரை, இரண்டு ஆண்டுகளுக்கு மேல், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படாத நிலையில், அதை ஆலைகள் விற்பனை செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.இந்த கால அளவை ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்.
அதாவது, லெவிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சர்க்கரை, ஆறு மாதங்களுக்குள் விற்கப்படாத நிலையில், அதனை ஆலைகள், வெளிச் சந்தையில் விற்பனை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.மத்திய அரசு, ரேஷன் கடைகளின் வாயிலாக விற்பதற்காக, ஆலைகளிலிருந்து, கொள்முதல் செய்யப்படும், சர்க்கரையின் விலையை, குறைந்தபட்சம், 15-20 சதவீத அளவிற்காவது உயர்த்த வேண்டும்.
தற்போதைய நிலையில், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக, கொள்முதல் செய்யப்படும், ஒரு கிலோ சர்க்கரையின் விலை, 19 ரூபாய் என்ற அளவில் உள்ளது.எனவே, சர்க்கரை ஆலைகளின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 'இஸ்மா' மேலும் தெரிவித்துள்ளது.பருவ மழை:சென்ற சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக இருந்தது.
அதேசமயம், உள்நாட்டில், இதன் பயன்பாடு, 2.20 கோடி டன்னாக இருந்தது.இந்நிலையில், குறைவான பருவ மழைப் பொழிவால், நடப்பு பருவத்தில், கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. இதையடுத்து, சர்க்கரை உற்பத்தி, 2.40 கோடி டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|