பதிவு செய்த நாள்
07 ஜன2013
01:06
புதுடில்லி:ரயிலில் மேற்கொள்ளப்படும் பால் போக்குவரத்திற்கு, சேவை வரி கிடையாது என, மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.அது போன்று, சரக்கு கப்பல் வாயிலான பால் போக்குவரத்திற்கும், சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், பல்வேறு உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதன்படி, மது வகைகள் நீங்கலாக, ரயில் அல்லது சரக்கு கப்பலில் கொண்டு செல்லப்படும் தேயிலை, காபி, வெல்லம், மாவு, பால் பொருட்கள், உப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு சேவை வரி பொருந்தாது.இந்த பட்டியலில், பால் போக்குவரத்து இடம் பெறுமா என, ரயில்வே கேள்வி எழுப்பியது.இதை தொடர்ந்து, மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் அல்லது கப்பலில், பால் போக்குவரத்திற்கு சேவை வரி வசூலிக்கக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|