நாடு முழுவதும் 79 குளிர்பதன கிடங்குகள் நாடு முழுவதும் 79 குளிர்பதன கிடங்குகள் ... அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்வதேச காபி ஏற்றுமதி 92 லட்சம் மூட்டைகளாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
23:49


புதுடில்லி :சர்வதேச காபி ஏற்றுமதி, சென்ற நவம்பர் மாதத்தில், 17 சதவீதம் அதிகரித்து, 92 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை=60 கிலோ) வளர்ச்சி கண்டுள்ளது.இது, அக்டோபர் மாதத்தில், 89 லட்சம் மூட்டைகளாகவும், முந்தைய, 2011ம் ஆண்டு நவம்பரில், 79 லட்சம் மூட்டைகளாகவும் இருந்தன. ஆக, தொடர்ந்து இரண்டு மாதங்களாக, சர்வதேச அளவிலான காபி ஏற்றுமதி உயர்ந்துள்ளது என, சர்வதேச காபி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பு 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), அக்டோபர் - நவம்பர் மாத காலத்தில், ஒட்டு மொத்த காபி ஏற்றுமதி, 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.87 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011-12ம் பருவத்தின் இதே காலத்தில், 1.54 கோடி மூட்டைகளாக இருந்தது.சென்ற 2011-12ம் முழு பயிர் பருவத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி 3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10.47 கோடி மூட்டைகளிலிருந்து, 10.78 கோடி மூட்டைகளாக உயர்ந்து காணப்பட்டது.நடப்பு பயிர் பருவத்தில், சர்வதேச காபி உற்பத்தி, 8 சதவீதம் உயர்ந்து, 14.60 கோடி மூட்டைகளாக உயரும் என, சர்வதேச காபி கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)