ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 சரிவுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 சரிவு ... கார்பாலிஷ் செய்யும் முறைகள் கார்பாலிஷ் செய்யும் முறைகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அதிக செயல்திறன் உறுதி மஹிந்திராவின் மேக்சிமோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2013
13:36

உறுதியான வாகன உற்பத்திக்கு பெயர்போன மஹிந்திரா நிறுவனம் வணிக வாகனத் தயாரிப்பிலும் களம் இறங்கி தரமான வாகனங்களை அறிமுகப்படுத்தி வருவது தெரிந்ததே. அவ்வரி‌சையில் மஹிந்தி ராவின் மேக்சிமோ மினி-ட்ரக் சரக்குகள் ஏற்றிச்செல்லும் சிறந்த வாகனமாக பெயர் பெற்றுள்ளது. அழகான கார்போன்ற முன்புற தோற்றமும், சிறந்த செயல் திறன் கொண்ட என்ஜினும், எரிபொருள் சிக்கனமும், குறைந்த பராமரிப்பும் கொண்ட கம்பீரமாக சாலைகளில் வலம்வருகிறது மேக்சிமோ.
மினிட்ரக் செக்மண்ட்களில் இதுவரை இல்லாத உலகிலேயே சிறந்த நவீன என்ஜினை மேக்சிமோ கொண்டுள்ளது. இதன் 2 சிலிண்டர் சிஆர்டிஈ (CRDE) என்ஜின் DOHC டெக்னாலஜியும் சிலிண்டருக்கு நான்கு வால்வுகள் வீதமும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இது 25 ஹெச்பி பவரை வழங்குவதுடன் சிறந்த எரிபொருள் சிக்கனமும் கொடுக்கிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும். 850 கிலோ எடையை ஏற்றிச்செல்லக் கூடிய வகையில் உறுதியாகவும் அதே நேரம் முன்புற கேபின் கார் போன்ற அம்சங்களைக் கொண்டு ஸ்டைலாகவும் காட்சியளிக்கிறது. முதல் ஒரு வருடத்திற்கோ அல்லது 40,000 கிலோமீட்டர் வரையிலோ பராமரிப்பு செலவவே இதற்கு இல்லை என்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
ஆப்பி ரெட், டைமண்ட் ஒயிட், சன்னியெல்லோ மற்றும் லீஃப் க்ரீன் என்ற நான்கு வண்ணங்களில் முன்புற மஹிந்திரா க்ரில்லுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மேக்சிமோ. இது மேலும் AIS029 என்ற வகை வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்
களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். இதன் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் போகக் கூடியதாகவும், குறைந்த சத்தமும், குறைந்த அதிர்வும் அதே நேரம் அதிக சக்தியை அளிக்கக்கூடியதாக இதன் என்ஜின் அமைக்கப் பட்டுள்ளது. ஓட்டுனர்கள் அதிக நேரம் ட்ரக்கில் இருக்க வேண்டி இருப்பதால் 85 கன அடி கொள்ளளவு கொண்ட கேபின் அமைக்கப் பட்டுள்ளது. இது நீளமாகவும், உயரமாகவும், நல்ல அகலமாகவும் இருப்பதால் ஓட்டுனரின் வசதியை பூர்த்தி செய்கிறது.
மேக்சிமோவில் பூஸ்டர்- அசிஸ்ட் டெக்னாலஜி உள்ளதால் இதன் லோட் சென்சிங் ப்ரொப் போஷனேட் வால்வு ப்ரேக் சரக்கின் எடைக்கு ஏற்ப ப்ரேக்கின் அழுத்தத்தை கணித்து இயக்குகிறது. இதனால் ப்ரேக் போட்டு வண்டியின் வேகத்தை குறைக்கும் சமயம் துரிதமாகவும், பாதுகாப்பகவும், சுலபமாகவும் ப்ரேக் இயங்கும் வகையில் உள்ளதால், ஓட்டுனருக்கு வண்டியை இயக்குவது சோர்வின்றியும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)