ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 சரிவுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 சரிவு ... அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் புதிய புரூட்னிக் பழரசம் அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் புதிய புரூட்னிக் பழரசம் ...
கார்பாலிஷ் செய்யும் முறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2013
15:25

கார் பயன்படுத்தும் போது நகரத்தின் சுற்றுச்சூழல் காரணமாக அதன் வண்ணத்தில் வழவழப்பிலும் தொய்வு ஏற்பட ஒரு வித மங்கலான தன்மை ஏற்படும். இதன் காரணமாக கார் வாங்கும் போது இருந்த பளிச் தன்மை குறைந்து ஒரு சில மாதத்திலேயே பழைய கார் போல தோற்றமளிக்கும். இதன் மூலம் நமக்கும் கார் ஓட்டும் போதும், அடுத்தவர் பளிச் காரை பார்க்கும் போது ஒரு வித மான உளைச்சல் ஏற்படும். இதனை தவிர்க்க கார் பாலிஷ் செய்யப்பட வேண்டியது அவசியம் இத்தகைய கார் பாலிஷ் செய்ய பிற நிறுவனத்தினரை அணுகும் போது செலவு அதிகரிக்கும். எனவே இத்தகைய சமயங்களில் நாமே நமது காரை பாலிஷ் செய்து கொள்வது மிகுந்த பயனளிக்கும்.அதோடு நமக்கு மிகவும் மிச்சமாகும்.
கார் பாலிஷ் செய்வது எப்படி?
கார் பாலிஷ் செய்யும் முன் அதற்கான பேஸ்ட்டை ஒரு மெத்தென்ற துணியில் வைத்து அந்த பாகத்தை மட்டும் நன்றாக சுற்றுவது போன்று தேய்க்க வேண்டும். கொஞ்சம் பாலிஷ் விட்டு கொண்டு துணி காய்ந்து விடாத வண்ணம் தேய்க்க வேண்டும். அந்த பகுதியை சுற்றியுள்ள சிராய்ப்பு மற்றும் கீரல்களையும் சேர்த்து தேய்த்து, நாம் பாலிஷ் பண்ணும் பகுதிக்கும் முன்பு பெயிண்ட் பண்ணி உள்ள பகுதிக்கு எந்தவித வேறு
பாடுமின்றி பாலிஷ் செய்ய வேண்டும்.
சில சமயம் சில பகுதிகளில் மோசமாக தென்பட்டால் அந்த பகுதியில் அந்த பெயிண்ட் பகுதியை எடுத்து விட்டு எலக்ட்ரிக் பாலிஷர் கொண்டு செய்யும் அதிக சிறப்புடனும் மிக வேகமாகவும் பாலிஷ் செய்து விடமுடியும். எலக்ட்ரிக் பாலிஷர் அதிகமான பெயிண்ட் ஒரே இடத்தில் படியாதவாறும், அதிலேயே மெழுகு பூச்சு சரியாக செய்துவிடும் தன்மை பெற்றும் உள்ளது. குறுகிய நேரத்தில் சிறப்பான பாலிஷ் செய்ய எலக்ட்ரிக் பாலிஷர் உதவுகிறது. அதிரடியான கீரல்கள் மற்றும் சிராய்ப்புகள் போன்றவையும் அதிகப்படியான தேய்மானங்களும் பாலிஷ் செய்வதன் மூலம் கார் பளபளப்பாக மின்னும். 3 முதல் 6 மாதத்திற்கு ஒரு முறை மெழுகு மூலம் பாலிஷ் செய்வதன் மூலம் கார் எப்போதும் புதிதாக பெயிண்ட் அடித்தது போலவே அழகாக இருக்கும்.
காலோநைட் 476 - மெழுகு அதிகநாள் உழைக்கக் கூடியது மற்றும் சிறப்பாக பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. மேலும் மெக்யூர்ஸ் என்டினக்ஸ் டெக்னாலஜி மெழுகுகள் மிகுந்த பயனளிக்கக் கூடியதாக திகழ்கிறது. இது பழைய கார்களின் அழகை மீட்டெடுக்கும் தன்மை கொண்டது.
பாலிஷ் செய்வதன் சிறப்பு : பாலிஷ் செய்வது மூலம் அந்த பகுதியில் உள்ள பெயிண்ட் பளபளவென்று இருக்கும். பாலிஷ் என்பது அந்த பாதித்த பகுதியை நன்றாக தேய்த்து விட்டு கிளேபார் எனப்படும் ஒரு வகை கட்டியை நன்றாக தேய்த்து பின் அதே நிற பெயிண்டை கொஞ்சம் பூசி பின்னர் மெழுகு பூசுவதுதான். பாலிஷ் செய்வது என்பது மெழுகு பூச்சு மட்டுமல்ல அதற்கு முன் அதன் பெயிண்ட் அடித்து பின்னர் மெழுகு பூசும் போதுதான் பாலிஷ் நன்றாக இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)