பதிவு செய்த நாள்
18 ஜன2013
09:24

தேவதானப்பட்டி: அரசு வழங்கும் குறைந்த விலை "சிமென்ட்' மூடை சப்ளையில் முறைகேடுகளை தடுக்க, வி.ஏ.ஓ., அல்லது ஊராட்சி தலைவரிடம் சான்று பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சிமென்ட் விலை உயர்ந்து வருகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு மூடை 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண மக்கள் வீடு கட்டுவதில் ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காக, அரசு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் குறைந்த விலையில் 200 ரூபாய்க்கு ஒரு மூடை சிமென்ட் விற்பனை செய்து வருகிறது.
வீடு பராமரிப்பு செய்வதற்கு ரேஷன் கார்டு "ஜெராக்ஸ்' கொடுத்து 50 மூடையும், புதிய வீடு கட்டுவதற்கு "பிளான் அப்ரூவல்' பெற்றுக் கொடுத்தால், 400 மூடை சிமென்ட் வரை குறைந்த விலையில் வழங்கப்பட்டது. முறைகேடுகள்: பராமரிப்பு என்ற பெயரில் பெறப்படும் சிமென்ட் மூடைகளில் முறைகேடு செய்வதாகவும், நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியில் உள்ள சிலர், மொத்தமாக கான்டிராக்டர்களுக்கு கொடுத்து அனுப்புவதாகவும் அரசுக்கு புகார்கள் சென்றன. புதிய கட்டுப்பாடு: சிமென்ட் சப்ளையில் நடந்து வரும் முறைகேடுகளை தடுப்பதற்காக, வீடு பராமரிப்பு செய்வதற்கு சிமென்ட் மூடைகள் பெற வேண்டும் என்றால், அந்தந்த பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., அல்லது ஊராட்சி தலைவரிடம் பராமரிப்பு செய்வதற்கான சான்று பெற வேண்டும், என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|