பதிவு செய்த நாள்
18 ஜன2013
11:28

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கொத்தவரை, வெண்டை உள்ளிட்ட காய்களின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் தக்காளி, வெண்டை, கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட காய்கள் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வாயிலாக வெளிமாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் காய்களை வாங்கிச் செல்கின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறையையடுத்து கடந்த இரு நாட்களாக எதிர்பார்த்த அளவு காய்கறி வரத்தில்லை. இதனால் கொத்தவரை, வெண்டை ஆகியவற்றின் விலை முந்தைய நாட்களின் விலையை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூபாய் 30-க்கு விற்ற கொத்தவரை நேற்று கிலோ 38 ரூபாய்க்கு விற்றது. கிலோ ரூபாய் ரூ.18க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.2 அதிகரித்து ரூ.20க்கு விற்றது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|