பதிவு செய்த நாள்
21 ஜன2013
04:19

தேனி:நாடு முழுவதும் பருவ மழை ஏமாற்றினாலும், ஒன்பது மாநிலங்களில், 3.34 கோடி பொதிகள் அளவிற்கு பருத்தி விளைந்துள்ளது. இதனால், ஜவுளித் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.நாடு முழுவதும், 2012ம் ஆண்டில், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை பொய்த்து விட்டது. ஓராண்டில் சராசரியாக, 45 சதவீத அளவிற்கே மழை பெய்துள்ளது.
குஜராத்:இந்தியா முழுவதும், மழை குறைந்ததால், பல்வேறு வகையான பயிர்களின் சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆனால், பருத்தி விளைச்சல் மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ளது.பருத்தி அறுவடை, கடந்த நவம்பர் மாதம் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. குஜராத்தில், 86 லட்சம் பொதிகள் (ஒரு பொதி - 170 கிலோ), பஞ்சாபில் 18 லட்சம், ராஜஸ்தானில் 16 லட்சம், ஒடிசாவில் 3 லட்சம், ஆந்திராவில்
72 லட்சம், அரியானாவில் 24 லட்சம், கர்நாடகாவில் 12 லட்சம், தமிழகத்தில் 5 லட்சம், மகாராஷ்டிராவில் 80 லட்சம், மத்திய பிரதேசத்தில் 17 லட்சம் பொதிகள் அளவிற்கு பருத்தி விளைந்துள்ளது. ஏற்றுமதி:மற்ற மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் பருத்தி விளைந்து உள்ளது. இதையடுத்து, நடப்பு ஆண்டில் பருத்தி உற்பத்தி, 3.34 கோடி பொதிகளாக இருக்கும்.இதில், உள்நாட்டு தேவைக்கு, 2.30 கோடி பொதிகள் பயன்படுத்தப்படும். 70 லட்சம் பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மீதம் உள்ள, 35 லட்சம் பருத்தி பொதிகளை இருப்பு வைக்க, இந்திய பருத்தி கழகம் முடிவு செய்துள்ளது.பருத்தி விலை விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏற்ற வகையில் உள்ளது. ஒரு குவிண்டால் பருத்தி,(100 கிலோ) 3,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பருத்தி, 34, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. நூற்பாலைகளுக்கும் இந்த விலை ஏற்றதாக உள்ளது.
நூற்பாலைகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கேண்டி பருத்தியை 60 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தன. அதே சமயம், உலக அளவில் நூலிழை விலை வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்கா:இதனால் நூற்பாலைகள் நஷ்டம டைந்தன. தற்போது ஒரு கேண்டி பருத்தி, 34,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. உலக அளவில் நூலிழை விலை அதிகரித்துள்ளது.சீனா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், இந்தியாவில் இருந்து நூலிழை மற்றும் ஜவுளி வகைகளை இறக்குமதி செய்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|