பதிவு செய்த நாள்
21 ஜன2013
04:21

கோவை:மின் வெட்டால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலும், பத்திரப்பதிவு வருவாயும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.பதிவுத்துறையின் கோவை மண்டலம், சென்னைக்கு அடுத்ததாக அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு என, தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டங்கள் இதற்கு காரணம்.
மின்வெட்டு:ஆனால், சாயத் தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட பிரச்னை, மின் வெட்டால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது போன்றவற்றால், இந்த மாவட்டங்களில், ரியல் எஸ்டேட் தொழில் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.கோவை மண்டலத்திலுள்ள மற்ற மாவட்டங்களை ஒப்பிட்டால், திருப்பூர் மாவட்டத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த மாவட்டத்தில், பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த ஆண்டை விட குறைந்து விட்டது.
இலக்கு:கோவை மண்டலத்திலுள்ள 5 பதிவு மாவட்டங்களில் கோவையில் 17, திருப்பூரில் 15, ஈரோட்டில் 11, கோபியில் 8, நீலகிரியில் 5 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.இவற்றுக்கு இந்த நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கு மார்ச் வரை கால அவகாசம் உள்ளது. ஆனால், ஏப்.,-டிச., வரையிலான 9 மாத வருவாய் விவரங்களைப் பார்த்தால், இந்த ஆண்டிற்கான இலக்கை எட்ட இயலாது என்பது தெளிவாகி விட்டது.
கோவை மாவட்டத்துக்கான இலக்கு, 864 கோடி ரூபாய். டிச., வரையிலும் கிடைத்த வருவாய், 429 கோடி ரூபாய். ஈரோடு மாவட்டத்துக்கு, 147 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச., வரையிலான வருவாய் 68.79 கோடி ரூபாய்.நீலகிரி மாவட்டத்துக்கான இலக்கு, 60 கோடி ரூபாய். அதில், 2012 ஏப்., - டிச., வ 35.21 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2011 ஏப்., - டிச.,வரையிலான வருவாயை விட, இது, 7.82 கோடி ரூபாய் அதிகம். கோவை மண்டலத்திலேயே, திருப்பூர் பதிவு மாவட்டத்தில் தான், வருவாய் பெரிதும் குறைந்துள்ளது.மொத்த வருவாய்:இந்த மண்டலத்துக்கு, 2012-13ம் நிதியாண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் வரையிலும், 730.61 கோடியே ரூபாய் வருவாய் வந்துள்ளது.
ஆனால், மீதமுள்ள 3 மாதங்களில், மொத்த வருவாயாக, 1,000 கோடி ரூபாயையாவது எட்ட முடியுமா என்பது சந்தேகமே.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, புதிதாக லே-அவுட் போட்டால், ஒரே நாளில் அத்தனை மனைகளும் விற்றுவிடும்.
இப்போது குறைந்த விலைக்கு, லே-அவுட் போட்டு, தவணை முறையில் பணம் கட்டலாம் என்றாலும் வருவதற்கு ஆளில்லை. என்று தெரிவித்தார்.
வழிகாட்டி மதிப்பு:பத்திர எழுத்தர் ஒருவர் கூறுகையில், "வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தியதே பத்திரப்பதிவு வருவாய் குறைந்ததற்குக் காரணம்' என்றார்.
பதிவுத்துறையின் அலுவலர் ஒருவர் கூறுகையில்,"வழிகாட்டி மதிப்பு உயர்வு இருந்த போதும், மின் வெட்டால் தொழில்
துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்பே, பத்திரப்பதிவில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணம்' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|