பதிவு செய்த நாள்
21 ஜன2013
13:51

ஹோண்டா நிறுவனம் வருடத்திற்கு 4 இருசக்கர வாகன மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹரியானா மாநிலம், மானேசரில் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் இந்தியாவுக்கேற்ற பல புதிய மாடல்களை தயாரித்து அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்தில்தான் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வருடத்திற்கு 4 புதிய மாடல்களை இந்த ஆய்வு மையத்தின் மூலம் வடிவமைத்து அறிமுகப்படுத்த உள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உலக அளவில் ஹோண்டாவின் முக்கிய ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய மாடல்களை தயாரிப்பது தவிர சர்வதேச அளவில் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மையமாகவும் இது செயல்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|