டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும்டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் ... மூலப்பொருட்கள் விலை உயர்வால் அசைவ உணவு விலை விர்ர்... மூலப்பொருட்கள் விலை உயர்வால் அசைவ உணவு விலை விர்ர்... ...
இந்தியா - சீனா வர்த்தகம் 6,647 கோடி டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
01:20

பீஜிங்:சென்ற 2012ம் ஆண்டில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், 10.1 சதவீதம் குறைந்து, 6,647 கோடி டாலராக (3.66 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 7,390 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.
இரும்புத்தாதுகடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ச்சி கண்டு வந்த இந்தியா - சீனா பரஸ்பர வர்த்தக வளர்ச்சியில், சென்ற ஆண்டில் தான் சரிவு ஏற்பட்டுள்ளது என, சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவிற்கான இந்தியாவின் இரும்புத்தாது ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி குறைந்ததுடன், சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை, 179 கோடி டாலர் உயர்ந்து, 2,887 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி:கடந்த 2010ம் ஆண்டில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், மிக அதிகளவாக, 42.66 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,174 கோடி டாலராக அதிகரித்திருந்தது.சென்ற 2012ம் ஆண்டில், சீனாவிற்கான, இந்தியாவின் ஏற்றுமதி, 19.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,880 கோடி டாலராக (1.03 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. சரிவு:இது, கடந்த 2011ம் ஆண்டில், 2,341 கோடி டாலராக (1.29 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது.
இதே போன்று, இந்தியாவிற்கான, சீனாவின் ஏற்றுமதியும், 5.7 சதவீதம் குறைந்து, 4,767 கோடி டாலராக (2.62 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்து உள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டில், 5,049 கோடி டாலராகவும், 2010ம் ஆண்டில், 4,088 கோடி டாலராகவும் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)