பொது காப்பீட்டு நிறுவனங்களின் வட்டி வருவாய் வளர்ச்சி குறைந்ததுபொது காப்பீட்டு நிறுவனங்களின் வட்டி வருவாய் வளர்ச்சி குறைந்தது ... வரி உயர்வால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு வரி உயர்வால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு ...
சொகுசு கார்களை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனங்கள்:இறக்குமதி செலவை குறைக்க...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2013
00:49

மும்பை:சொகுசு வகை கார்களை இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவைக் குறைக்க, அவற்றை இந்தியாவிலேயே தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்யும் முயற்சியில், முன்னணி நிறுவனங்கள் ஈடுபடத் துவங்கியுள்ளன. இந்தியாவில் சொகுசுக் கார் சந்தையில் ஜெர்மனியை சேர்ந்த பீ.எம்.டபிள்யூ குழுமம் முதலிடத்தில் உள்ளது. இக்குழுமம், பீ.எம்.டபிள்யூ., மினி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என்ற மூன்று பிராண்டுகளில் சொகுசுக் கார்களை விற்பனை செய்து வருகிறது.இக்குழுமத்தை சேர்ந்த, பீ.எம்.டபிள்யூ குரூப் இந்தியா, சென்ற 2012ம் ஆண்டு,9,375 கார்களை விற்பனை செய்துள்ளது.
சுங்க வரி:சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, ஆண்டுக்கு, 11 ஆயிரம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டது. இங்கு, "3 சீரிஸ்', "5 சீரிஸ்', "எக்ஸ் 1', "எக்ஸ் 3' என்ற நான்கு வகை கார்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, ஒருங்கிணைக்கப்படுகின்றன.இது போன்ற உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு, 10 சதவீத அளவிற்கே சுங்க வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம், முழுமையான கார் இறக்குமதிக்கு, 75 சதவீத சுங்க வரி செலுத்த வேண்டியுள்ளது.இந்த வகையில், இந்நிறுவனத்தின், 11 பிராண்டுகளில், "6 சீரிஸ்', "எம் சீரிஸ்', "இசட்4 ரோட்ஸ்ட்' மற்றும் "கிரான் டுரிஸ்மோ' ஆகிய ஆடம்பர கார்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
முதலிடம்:இந்நிறுவனம், கார் விலையை குறைத்து, சொகுசுக் கார் சந்தையில், முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, இவ்வாண்டு இறுதிக்குள், மேலும் மூன்று மாடல் கார்களின் பாகங்களை இறக்குமதி செய்து, ஒருங்கிணைத்து விற்பனை செய்யவும், கார் உற்பத்தியை விரிவுபடுத்தவும் உள்ளது.
சொகுசுக் கார் சந்தையில், வோக்ஸ் வேகன் குழுமத்தை சேர்ந்த ஆடி ஏ.ஜி., நிறுவனம், இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம், சென்ற ஆண்டு, 9,003 சொகுசுக் கார்களை விற்பனை செய்துள்ளது.நடப்பாண்டு, இதன் "க்யூ 3' மற்றும் சிறிய ரகத்தை சேர்ந்த, "ஏ 3' சொகுசுக் கார்களின் பாகங்களை இறக்குமதி செய்து, ஒருங்கிணைத்து, விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது, இந்நிறுவனம் உள்நாட்டில் ஐந்து மாடல்களில் சொகுசுக் கார்களை உருவாக்கி வருகிறது. மேலும், பல புதிய சொகுசுக் கார்களை, புனே தொழிற்சாலையில் தயாரித்து சந்தைப்படுத்தவும், இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறைந்த விலை:இந்நிறுவனம், வரும் 2015ம் ஆண்டு,சொகுசுக் கார் சந்தையில், முதலிடத்திற்கு முன்னேற, பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், சென்ற ஆண்டில், 7,138 சொகுசுக் கார்களை விற்பனை செய்து, இவ்வகை சந்தையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேற்கண்ட மூன்று முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி, மேலும் பல புதிய நிறுவனங்களும், இந்திய சந்தையில், குறைந்த விலையில், சொகுசுக் கார்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இது போன்ற திட்டங்களால், தற்போது குறைந்த பட்சம், 30 லட்சம் என்ற அளவில் உள்ள சொகுசுக் கார்களின் விலை, 25 லட்சத்திற்கும் கீழாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறைந்த விலை கொண்ட சொகுசுக் கார் சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதை அடுத்து, உள்நாட்டை சேர்ந்த டாட்டா மோட்டார்ஸ் நிறுவனமும், அதன் சொகுசு வகை, ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களை இந்தியாவில் தயாரிக்கத் துவங்கியுள்ளது.
இதன் "ஜாகுவார் எக்ஸ் எப்' கார் விலை, 57 லட்சத்தில் இருந்து, 1 கோடி ரூபாய் வரை உள்ளது. தற்போது, உள்நாட்டில் இவ்வகை கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால், இதன் குறைந்த பட்ச விற்பனை விலை, 13 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மந்தநிலை:உள்நாட்டில், ஒட்டு மொத்த வாகன விற்பனை மந்தநிலையில் உள்ள போதிலும், சொகுசு கார்களின் விற்பனை சிறப்பாகவே உள்ளது. சமூக அந்தஸ்துக்காக, பெருந்தொழிலதிபர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்டோர், இவ் வகை கார்களை வாங்குகின்றனர்.இதனால், தற்போது ஆண்டுக்கு, 25 ஆயிரமாக உள்ள, இவ்வகை கார்களின் விற்பனை, வரும் 2015ம் ஆண்டுக்குள், 50 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)