பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:19

மும்பை: உள்நாட்டு சந்தையில் மிளகு வரத்து குறைந்துஉள்ளதால், அதன் விலை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக, மிளகு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதி ஆண்டில், மிளகு உற்பத்தி, 55 ஆயிரம் டன்னை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அறுவடையில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் விவசாயிகள், அதிக அளவில் மிளகை இருப்பு வைத்திருப்பது போன்றவற்றால், சந்தையில் அதன் வரத்து குறைந்துள்ளது. தற்போது, ஒரு கிலோ மிளகு, 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.பிப்ரவரியில், அறுவடைக்கு பிறகு, புதிய மிளகு சந்தைக்கு வரும் நிலையில், அதன் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. என்.சி.டீ.இ.எக்ஸ் முன்பேர சந்தையில், பிப்ரவரி மாதத்திற்கான ஒரு கிலோ மிளகின் ஒப்பந்த விலை, 372 ரூபாய் என்ற அளவில் உள்ளது. மிளகு வரத்து குறைவாலும், விலை அதிகரிப்பாலும், அதன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், சென்ற நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில், 9,000 டன் என்ற அளவிற்கே மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 40 சதவீதம் குறைவாகும்.சர்வதேச சந்தையில், இந்தியாவிற்கு கடும் போட்டியாக வியட்நாம், பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகள், ஒரு டன் மிளகை, 6,000 - 7,000 டாலர் என்ற விலையில் விற்பனை செய்கின்றன.அதே சமயம், இந்திய மிளகின் விலை, டன்னுக்கு, 8,000 டாலர் என்ற அளவில் உள்ளதால், சர்வதேச சந்தையில் அதற்கான தேவை குறைந்துள்ளது.இதனால், நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் டன் மிளகு ஏற்றுமதிக்கான இலக்கை எட்டுவது கடினம் என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|