பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:21

புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 3.02 -3.13 லட்சம் கோடி ரூபாய் (5,500-5,700 கோடி டாலர்) என்ற அளவில் இருக்கும் என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பின் செயல் இயக்குனர் பீ.சர்கார் தெரிவித்தார்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. எனவே, நடப்பு நிதியாண்டின் பொறியியல் சாதன ஏற்றுமதி இலக்கான, 6,000 கோடி டாலரை (3.30 லட்சம் கோடி ரூபாய்) எட்ட வாய்ப்பில்லை.ஏனெனில், நாட்டின் ஒட்டு மொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில், மேற்கண்ட இரு நாடுகளின் பங்களிப்பு மட்டும், 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான முதல் எட்டு மாத காலத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 7.5 சதவீதம் சரிவடைந்து, 3,600 கோடி டாலராக குறைந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, 5.95 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 18,920 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,920 கோடி டாலரிலிருந்து, 5,820 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது என, சர்கார் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|