பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:22

சென்னை: சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், உள்நாட்டில், தகவல் தொழில்நுட்ப துறையைச் (ஐ.டி.,) சேர்ந்த, முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.உள்நாட்டில், தகவல் தொழில்நுட்ப துறையில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,), இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., காக்னிசென்ட், போலாரீஸ் உள்ளிட்ட, பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முக்கியச் சந்தைகளாக திகழ்கின்றன. பொருளாதார மந்த நிலையால், இந்நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, 35-40 சதவீதம் குறைந்துள்ளது.சென்ற 2012ம் ஆண்டில், நான்கு இந்திய நிறுவனங்கள், 55,716 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. இது, கடந்த 2011ம் ஆண்டில், 1.08 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக, இந்நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கை, 6.47 லட்சம் என்ற அளவில் உள்ளது.கணக்கீட்டு காலத்தில், டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல்., ஆகிய நிறுவனங்களில், வேலை பெற்றோர் எண்ணிக்கை முறையே, 36,886, 10,541, 6,171 மற்றும் 2,118 என்ற அளவில் உள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|