பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:27

புதுடில்லி: வரும் 2016ம் ஆண்டில், உள்நாட்டில், சிப்பமிடும் தொழிலின் (பேக்கேஜிங்) விற்றுமுதல், 4,370 கோடி டாலரை (2.40 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என, இந்திய சிப்பமிடுதல் பயிலகம் (ஐ.ஐ.பி.,) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், சிப்பமிடும் தொழில், ஆண்டுக்கு, 5 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதேசமயம், இந்தியாவில், இதன் வளர்ச்சி ஆண்டுக்கு, 12 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உள்ளது.இந்தியாவில், சிப்பமிடும் தொழிலில், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, 85 சதவீதமாகும்.தற்போது, சிப்பமிடும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு, தேவை அதிகரித்து வருகிறது.இதையடுத்து, வரும் 2016ம் ஆண்டில், இந்தியாவில், சிப்பமிடும் தொழிலின் விற்றுமுதல், 4,370 கோடி டாலரை (2.40 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ஆண்டில், சர்வதேச அளவில், இது, 55,000 கோடி டாலர் (30.25 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|