பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:28

மும்பை: சென்ற, 2012ம் ஆண்டு, டிசம்பர் நிலவரப்படி, இந்திய வங்கிகள் மறுசீரமைப்பு செய்த கடன் தொகை, 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.நாட்டின் பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் செலவினங்கள், குறித்த காலத்தில் முடிக்கப்படாத திட்டங்கள் போன்றவற்றால், இந்திய நிறுவனங்களால், வங்கிகளில் வாங்கிய கடனை, சரிவர செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மறுசீரமைப்பு இத்தகைய கடன்கள், வசூலாகாத கடன்களாக மாறுவதை தடுக்க, வங்கிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்கின்றன.இதன்படி, பழைய கடனை, புதிய கடனாக மாற்றுதல், வட்டியை குறைத்தல், கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்தல் போன்ற சலுகைகளை வங்கிகள் வழங்குகின்றன.பொருளாதாரம்இவ்வாறு, நிறுவனங்களின் மறுசீரமைக்கப்பட்ட கடன், சென்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், 24,584 கோடி ரூபாய் அதிகரித்து, 2.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, பாதிக்கப்பட்ட, நிறுவனங்களிடம் இருந்து, வசூலிக்க வேண்டிய தொகையாகும்.நாட்டின் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பாத வரை, மறுசீரமைக்கப்பட்ட கடன்களில், 25-30 சதவீதம் வசூலாகாத கடன்களாக மாற வாய்ப்புள்ளதாக, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, அடிப்படை கட்டமைப்பு துறைக்கு அளித்துள்ள, கடன்களை திரும்ப பெறுவது சிக்கலானதாக இருக்கும் என, தெரிகிறது.நெருக்கடிநடப்பு நிதியாண்டில், நிறுவனங்கள் பெற்ற, 62,085 கோடி ரூபாய் அளவிலான கடன்களை, வங்கிகள் மறுசீரமைத்துள்ளன. இது, முந்தைய முழு நிதியாண்டின் அளவை விட, 50 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த, 2008ம் ஆண்டு ஏற்பட்ட, சர்வதேச பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, இந்திய வங்கிகள், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள துவங்கின.கடன்அப்போது, வங்கிகளுக்கு நிறுவனங்களிடம் இருந்து, வசூலிக்க வேண்டிய கடன் தொகையில், 15-20 சதவீதம், வசூலாகாத கடன்களாக இருந்தன. ஆனால், இது, தற்போது, 25-30 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சியில் மந்தம், போன்றவற்றால், வசூலாகாத கடன்கள் அதிகரிக்கும் என, தெரிகிறது.சென்ற செப்டம்பர் நிலவரப்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, 40 வங்கிகளின் மொத்த வசூலாகாத கடன், 1.66 லட்சம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது. இது, முந்தைய ஆண்டு, இதே காலத்தை விட, 46 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீடுபொது துறை வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மிக அதிக அளவில், அதாவது, அதன் மொத்த கடனில், 5.15 சதவீத அளவிற்கு, வசூலாகாத கடனை கொண்டுள்ளது. வரும், மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டில், வங்கிகளின் கடன் மறுசீரமைப்பு தொகை, 3.25 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
****
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|