பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:30

மும்பை: வங்கிகள், ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட வரி விலக்கு கொண்ட, குறித்த கால டெபாசிட் திட்டங்களை பிரபலப்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.வரி விலக்குகே.கே.வோரா தலைமையிலான குழு, வங்கி செயல்பாடுகள் குறித்த அறிக் கையை, ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:வங்கிகள், நீண்ட கால நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, ஐந்தாண்டிற்கு மேற்பட்ட, குறித்த கால டெபாசிட் திட்டங்களை பிரபலப்படுத்த வேண்டும். இத்திட்டங்கள், வரி விலக்கு சலுகை கொண்டதாக இருக்க வேண்டும்.வங்கிகள், நிலையான வட்டி விகிதத்தில், 30 ஆண்டுகளுக்கான கடன்களை வழங்குவதன் மூலம், கடனாளியின் மாதாந்திர தவணை சுமையை குறைக்க முடியும். இதற்கு, 30 ஆண்டுகால முதிர்வை கொண்ட, அரசு கடன் பத்திரங்களுக்கான, வட்டி விகிதங்களை வரையறுக்க வேண்டும். வங்கிகள் வெளியிடும் கடன்பத்திரங்களில், காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியங்கள், சேமநல நிதியங்கள் போன்ற பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்.விழிப்புணர்வு:நிலையான வட்டி விகிதத்தில், நீண்ட கால கடன்களை வழங்கும்போது, ஏழு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வட்டி விகிதங்களை மறுசீரமைக்கலாம். நிலையான வட்டி விகித அடிப்படையில், நிலுவையில் உள்ள கடன்களை முன்னதாகவே முடிப்பதற்கு, வங்கிகள் அபராதம் விதிக்கலாம்.வட்டி விகித மாற்றங்களால், மாதாந்திர தவணையில் ஏற்படும் தாக்கம் குறித்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|