பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:31

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -டீசல் விலை உயர்வால், சரக்கு போக்குவரத்து செலவினம் அதிகரித்து, பல்வேறு பகுதிகளில் வெங்காயம் விலை உயர வழி வகுத்துள்ளது.குறிப்பாக, மும்பை நாசிக் லசல்கான் சந்தையில், கடந்த இரண்டு வாரங்களில் இதன் விலை, குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ), 25 சதவீதம் அதிகரித்து, 1,600-1,700 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.சில்லரை விலைஇதையடுத்து, மும்பை சில்லரை விலை கடைகளில், ஒரு கிலோ வெங்காயம், 23-24 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஜனவரி 5ம் தேதி முதல், 10ம் தேதி வரையிலான காலத்தில், மும்பை சந்தையில், ஒரு குவிண்டால் வெங்காயத்தின் சராசரி விலை, 1,245 ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 360 ரூபாய் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆக, ஓர் ஆண்டு காலத்தில், வெங்காயத்தின் விலை, 246 சதவீதம் அதிகரித்துஉள்ளது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.இதே காலத்தில், சென்னையில், ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை, 115 சதவீதம் உயர்ந்து, 800 ரூபாயிலிருந்து, 1,717 ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று, ஐதராபாத் (146 சதவீதம்), இந்தூர் (125 சதவீதம்), பெங்களூரு (73 சதவீதம்), டில்லி (102 சதவீதம்) ஆகிய முக்கிய நகரங்களின் சந்தைகளிலும் இதன் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தேவை அதிகரித்து வரும் நிலையில், நடப்பு 2012-13ம் ஆண்டில், வெங்காயம் உற்பத்தி, கடந்த ஆண்டை காட்டிலும், 20 சதவீதம் சரிவடையும் என, தேசிய பொருளாதார ஆய்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. கர்நாடகாகுறிப்பாக, நடப்பு ஆண்டில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் வெங்காய உற்பத்தி முறையே, 35 சதவீதம் மற்றும் 25 சதவீதம் குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2011-12ம் ஆண்டில், நாட்டின் ஒட்டு மொத்த வெங்காய உற்பத்தி, 1.63 கோடி டன்னாக இருந்தது என, தேசிய தோட்டக்கலை துறை (என்.எச்.பீ.,) மதிப்பீடு செய்துள்ளது. வங்கதேசத்தில், இதன் உற்பத்தி, 15 லட்சம் டன்னாக இருக்கும் நிலையில், இதற்கான தேவை, 18-20 லட்சம் டன்னாக இருக்குமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானிலும் இதன் உற்பத்தி குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.இது போன்ற காரணங்களால், நடப்பாண்டில், நாட்டின் வெங்காய ஏற்றுமதிக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளதாக என்.எச்.பீ., தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|