பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:33

புதுடில்லி: கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 7.67 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய, 2011ம் ஆண்டில், 7.36 கோடி டன்னாகவும், கடந்த 2010ம் ஆண்டில், 6.90 கோடி டன்னாகவும் இருந்தது.உள்நாட்டில், உருக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு, போதிய அளவிற்கு, இரும்புத் தாது கிடைக்காத நிலையிலும், இந்நிறுவனங்களின் உற்பத்தி, கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.வளர்ச்சிஉலகளவில், உருக்கு உற்பத்தியில், சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு, அடுத்தபடியாக, இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது.கடந்த 2009ம் ஆண்டில், உலக அளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 2010ம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி, இந்தியாவை, நான்காவது இடத்திற்கு தள்ளியது.உலக அளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. என்றாலும், உலகின் உருக்கு உற்பத்தியில், கடந்த 2012ம் ஆண்டில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா, 4.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக, உலக உருக்கு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு(டபிள்யூ.எஸ்.ஏ.,) வெளியிட்டுஉள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டில், உலக அளவில், உருக்கு உற்பத்தி, சாதனை அளவாக, 154.80 கோடி டன்னாக அதிகரித்திருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டின், உற்பத்தியை விட, 1.2 சதவீதம் அதிகமாகும். கணக்கீட்டு ஆண்டில், ஆசிய நாடுகளின், உருக்கு உற்பத்தி, 2.6 சதவீதம் வளர்ச்சிகண்டு, 101.27 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது. இது, கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டின், உலக உருக்கு உற்பத்தியில் முறையே, 64.5 சதவீதம் மற்றும் 65.4 சதவீத பங்களிப்பாகும்.சீனாஉலக அளவில், உருக்கு உற்பத்தியில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, கடந்த 2012ம் ஆண்டில், 71.65 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 3.1 சதவீதம் அதிகமாகும்.பங்களிப்புஉலக உருக்கு உற்பத்தியில், இந்நாடு, 46.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், இந்நாட்டின் பங்களிப்பு, 45.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது.உலக அளவில், உருக்கு உற்பத்தியில் ஜப்பான், இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நாடு, கடந்த 2012ம் ஆண்டில், 10.72 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள அமெரிக்கா, கடந்த ஆண்டு, 8.86 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது.இது, கடந்த 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 2.5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில், தென் கொரியாவின் உருக்கு உற்பத்தி, 6.93 கோடி டன்னாக இருந்தது.வட அமெரிக்கா, கடந்த 2012ம் ஆண்டில், 12.19 கோடி டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டு, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின், கச்சா உருக்கு உற்பத்தி, 4.7 சதவீதம் குறைந்து, 16.94 கோடி டன்னாக இருந்தது. இதையடுத்து, கச்சா உருக்கு உற்பத்தியில், ஜெர்மனி (4.27 கோடி டன்), இத்தாலி (2.72 கோடி டன்) மற்றும் பிரான்ஸ் (1.56 கோடி டன்) ஆகிய நாடுகள் உள்ளன.பிரேசில்சென்ற 2012ம் ஆண்டில், தென் அமெரிக்காவின் கச்சா உருக்கு உற்பத்தி, 3 சதவீதம் சரிவடைந்து, 4.69 கோடி டன்னாகவும், பிரேசில் நாட்டின் உருக்கு உற்பத்தி, 1.5 சதவீதம் குறைந்து, 3.47 கோடி டன்னாகவும் இருந்தது.சர்வதேச அளவில், கடந்த ஆண்டு, உலக நாடுகளின், உருக்கு உற்பத்தி, அவற்றின் மொத்த உற்பத்தி திறனில், 78.80 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த 2011ம் ஆண்டில், 80.7 சதவீதம் என்ற அளவில் சற்று அதிகரித்து காணப்பட்டது என, உலக உருக்கு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|