பதிவு செய்த நாள்
23 ஜன2013
23:35

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், புதன் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. நுகர்பொருள் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் யூனிலிவரின் நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கேற்ப சிறப்பாக அமையவில்லை. இதனால், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.இருப்பினும், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது. அதேசமயம், இதர துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 45.04 சதவீதம் அதிகரித்து, 20,026.61 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,058.07 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,920.91 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 5.80 புள்ளிகள் உயர்ந்து, 6,054.30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,069.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,021.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|