பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:14

மும்பை:நடப்பு நிதியாண்டில், சென்ற, 11ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகள், உணவு சாரா துறைக்கு வழங்கிய கடன், 16.2 சதவீதம் உயர்ந்து, 49.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், அதன் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி விகிதத்தை, 1 சதவீதம் குறைந்து, 16 சதவீதமாக நிர்ணயித்தது. மேலும், வங்கிகள் திரட்டும் டெபாசிட் வளர்ச்சி, 15 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என, தெரிவித்துள்ளது.
பொருளாதார சுணக்க நிலையால், வங்கிகளில், கடன் பெறுவது அதிக ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. இருப்பினும், சில்லரை துறையினருக்கான கடன், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.கணக்கீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13.28 சதவீதம் வளர்ச்சியடைந்து, 65.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது."நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, பணவீக்கம் அதிகரிப்பு, தங்கம் விலை உயர்வு போன்ற காரணங்களால், வங்கிகள் திரட்டும் டெபாசிட் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது' என, வங்கி துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|