பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:16

புதுடில்லி:நடப்பு முழு நிதியாண்டில், நாட்டில், கூடுதலாக, 1,500 மெகா வாட் அளவிற்கு மட்டுமே, காற்றாலை மின் திட்டங்கள் நிறுவப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
சலுகைகள்:மத்திய அரசு, காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தது. இதையடுத்து, பல தனியார் நிறுவனங்கள், இத்துறையில் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டன.இந்நிலையில், காற்றாலை நிறுவனங்களுக்கு, மின் உற்பத்தியின் அடிப்படையில், வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை, மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது.
இதையடுத்து, உள்நாட்டில், காற்றாலை மின் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு குறைந்து உள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டில், காற்றாலை மூலம், கூடுதலாக, 2,500 மெகா வாட் அளவிற்கு, மின் உற்பத்தித் திட்டங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. சென்ற டிசம்பர் வரையிலுமாக, கூடுதலாக, 1,068 மெகா வாட் அளவிற்கே, காற்றாலை மின் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதனால், நடப்பு முழு நிதியாண்டில், கூடுதலாக, 1,500 மெகா வாட் அளவிற்கு மட்டுமே, காற்றலை மின் திட்டங்கள் நிறுவப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, நிர்ணயிக்கப் பட்ட இலக்கை விட, 1,000 மெகாவாட் குறைவாகும். கடந்த 2011-12ம் நிதியாண்டில், காற்றாலை வாயிலாக, கூடுதலாக, 3,000 மெகா வாட் அளவிற்கு மின் திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய மின்சக்தி:வரும் 2020ம் ஆண்டில், காற்றாலை, சூரிய மின்சக்தி, தாவர கழிவு உள்ளிட்ட, புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் வாயிலாக, 80 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, உள்நாட்டில், 26 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில், காற்றாலையின் பங்களிப்பு, 18,275 மெகாவாட் ஆகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|