பதிவு செய்த நாள்
25 ஜன2013
13:44

இந்தியாவில், எஸ்.யு.வி., கார் பிரிவில், கடந்த, 2009ம் ஆண்டு, டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம், பார்ச்சூனர் காரை அறிமுகப்படுத்தியது. இதுவரை, 41 ஆயிரம், பார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் கூடிய, 2013ம் ஆண்டுக்கான, பார்ச்சூனர் காரின், புது வேரியன்டை, டொயோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலை ரூ.22.33 லட்சத்தில் இருந்து, ரூ.22.93 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம், டில்லி) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபரில், பார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ காரை, லிமிடெட் எடிஷன் காராக அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தொடர்ந்து விற்பனை செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு, ஜனவரி, 18ம் தேதி முதல் துவங்கியுள்ளது. இந்த காரின் விலை ரூ.21.97 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டில்லி).
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|