பதிவு செய்த நாள்
26 ஜன2013
01:06

மும்பை:சென்ற டிசம்பர் மாதத்தில், இந்நிய நிறுவனங்கள், அயல் நாடுகளில் இருந்து திரட்டிய கடன், 115 கோடி டாலராக (6,325 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில், 135 கோடி டாலராக (7,425 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்கள், புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்குத் தேவையான நிதியை வெளிநாடுகளிலிருந்து, அன்னிய வர்த்தக கடன் மற்றும் அன்னியச் செலாவணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன் பத்திரங்கள் வாயிலாக திரட்டி கொள்கின்றன. இந்தியாவுடன் ஒப்பிடும் போது, மற்ற நாடுகளில், கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக உள்ளதே இதற்கு காரணம்.
மதிப்பீட்டு காலத்தில், ஏர் - இந்தியா, எஸ்ஸார் ஸ்டீல், அதானி போர்ட்ஸ், சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டால் கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து கடனை திரட்டி கொண்டுள்ளன.
ஏர்-இந்தியா நிறுவனம், பொறியியல் சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக, 9 கோடி டாலரை திரட்டி கொண்டது. எஸ்ஸார் ஸ்டீல் (10 கோடி டாலர்),சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், (12 கோடி டாலர்), இண்டால்கோ இண்டஸ்ட் ரீஸ்(10கோடி டாலர்), அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் இக்கானமிக்சோன் (4கோடிடாலர்)ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|