பதிவு செய்த நாள்
26 ஜன2013
01:08

டாவோஸ்:தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,), நடப்பாண்டில், 2.30 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறு வார்கள் என, இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் இணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து விட்டது. ஐரோப்பிய நாடுகள் பிளவுபடாமல், ஒன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார வளர்ச்சி, ஒரு நிலைக்கு வரும் சூழல் உருவாகி யுள்ளது.இது போன்ற காரணங்களால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு, ஐ.டி., துறையின் வளர்ச்சி நன்கு இருக்கும் என, தெரிகிறது.
இவ்வளர்ச்சியின் எதிரொலியாக, ஐ.டி., துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில், தற்போது ஐ.டி., துறையில் 25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இத்துறை,10 சதவீதம் வளர்ச்சி கண்டால் கூட, 2 - 2.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.எனினும், எனது கணிப்பின்படி, நடப்பாண்டில், ஐ.டி., துறை 7 சதவீதம் வளர்ச்சி காணும்.முதலீட்டிற்கு இதுவே சரியான சூழல்.அண்மைக்காலமாக மத்திய அரசு அறிவித்து வரும்,பொருளாதார வளர்ச்சித் திட்டங்களால், அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளன.
இந்த சாதகமான அம்சத்தால், இந்தியாவில் அன்னிய முதலீடு நன்கு வளர்ச்சி காணத் துவங்கியுள்ளது. இதனால், ஐ.டி., துறை, நடப்பாண்டில், ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட சதவீத வளர்ச்சியை காணும். இவ்வாறு கோபால கிருஷ்ணன் கூறினார்.இதனிடையே, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.டி.,சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த 2012ம் ஆண்டு, 1.8 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு 2013ம் ஆண்டில், 5.2 சத வீதம் வளர்ச்சி கண்டு, 92,700 கோடி டாலராக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|