கோதுமை கொள்முதல் 4.20 கோடி டன்னாக உயரும்கோதுமை கொள்முதல் 4.20 கோடி டன்னாக உயரும் ... டீசல் விலை உயர்வால் சிமென்ட் உற்பத்தி செலவு உயரும் டீசல் விலை உயர்வால் சிமென்ட் உற்பத்தி செலவு உயரும் ...
பருத்தி நூலிழை ஏற்றுமதி 100 கோடி கிலோவை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:14

நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, முன் எப்போதும் இல்லாத வகையில், 100 கோடி கிலோவை எட்டி சாதனை படைக்கும் என, ஜவுளி ஆணையர் பீ.ஜோஷி தெரிவித்தார்.சர்வதேச அளவில் பருத்தி நூலிழைக் கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனாவில் இதற்கான தேவை மிகவும் சிறப்பான அளவில் உள்ளது.
மதிப்பீடு:இதையடுத்து, முன்னர் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த, ஏற்றுமதி அளவான, 92 கோடி கிலோவை காட்டிலும், தற் போது, கூடுதலாக, 8 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதியாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஏற்றுமதி, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 82.76 கோடி கிலோவாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் ஒன்பது மாத காலத்தில், நாட்டின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும், 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 75.80 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என, ஜவுளி ஆணையம் தெரிவித் துள்ளது.இதே போன்று, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் பருத்தி நூலிழை உற்பத்தி, 231.70 கோடி கிலோவாக உயர்ந்துஉள்ளது.
உற்பத்தி:இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை காட்டிலும், 14 சதவீதம் அதிக மாகும். நாட்டின் ஒட்டு மொத்த நூலிழை ஏற்றுமதியில், சீனாவின் பங்களிப்பு, 30 சதவீதமாகவும், வங்கதேசத்தின் பங்களிப்பு, 16 சதவீதமாகவும் உள்ளது.நடப்பாண்டில், வங்கதேசத்திற்கான இந்தியாவின் நூலிழை ஏற்றுமதி, மூன்று அல்லது நான்கு சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில், பருத்தி விலை மற்றும் நூலிழை உற்பத்திக்கான செலவினம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, சீனாவிற்கான, பருத்தி நூலிழை ஏற்றுமதி அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது.பாகிஸ்தான் தொழிற்சாலைகளுக்கு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் நூலிழை உற்பத்தி, 30 முதல் 40 சதவீதம் சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், உள்நாட்டில், நூலிழை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வருவதாக, இன்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கைலாஷ் லால்பூரியா தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஒரு கிலோ, "30-எஸ் கோம்ப்டு' வகை பருத்தி நூலிழை விலை, 3.50 டாலராகவும், ஒரு கிலோ, "40-எஸ் கவுன்ட்' நூலிழை விலை, 4 டாலராகவும் உள்ளன.
சீனா:சீனாவில், ஒரு பவுண்ட் பருத்திவிலை, 1.4 டாலர் என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் இதன் விலை, 85 சென்டாக குறைந்து காணப்படுகிறது. இதனால், சீன நிறுவனங்கள், இந்தியாவிலிருந்து, அதிகளவில் பருத்தி நூலிழைகளை, இறக்குமதி செய்து கொள்கின்றன.சீனாவில், பணியாளர்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளதால், தற்போது, அந்நாடு நூற்பு நடவடிக்கைகளை குறைத்து கொண்டுள்ளது. அதே சமயம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தி ஏற்றுமதி அதிகரிக்கும்:நடப்பு 2012-13ம் சந்தைப் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 80 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) அதிகரிக்கும் என, பருத்தி ஆலோசனை கழகம் மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய மதிப்பீட்டில், 70 லட்சம் பொதிகளாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.மதிப்பீட்டு பருவத்தில், பருத்தி உற்பத்தி, 3.30 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் முக்கிய நாடுகளில் பருத்தி உற்பத்தி குறையும் என,மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில், சென்ற டிசம்பரில், பருத்தி உற்பத்தி, 1.4 சதவீதம் குறையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்நாட்டில், நடப்பாண்டு, இதன் உற்பத்தி, 1.70 கோடி பொதிகளிலிருந்து, 1.40 கோடி பொதிகளாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், இந்தியாவின் பருத்தி ஏற்றுமதிக்கான சூழ்நிலை மிகவும் பிரகாச மாகியுள்ளது.

-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)