தங்கம் விலை சவரனுக்கு ரூ.8  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ... ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் ...
பயண பாதுகாப்பிற்கு ரியர்வ்யூ மிர்ரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2013
14:33

ரியர் வியூ மிர்ரர் என்பது ஓட்டுனர் இருக்கையின் கதவின் வெளிப்புறம் இருக்கும், பின்புறம் வரும் வாகனங்களை துல்லியமாய் காட்டக்கூடியது என்பதும் அதை சரியாக அட்ஜஸ்ட் செய்துக்கொள்வது ஓட்டுனரின் பொறுப்பு என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்வதில் பல விஷயங்கள் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. காரின் உட்புறம் நடுவில் இருக்கும் கண்ணாடியில் நாம் பின்புறம் வரும் காரை பார்ப்போம். அடுத்து அது நம் பக்கத்தில் கடந்து செல்வதைப் பார்க்கலாம். அந்த கார் இடைப்பட்ட சில நொடிகள் எங்கிருந்தது என்பதே தெரியாமல் சிறிது நேரம் இருக்கும். உட்புறக்
கண்ணாடியில் பார்த்த நேரத்திற்கும், நம்மை அது கடந்து சென்ற நேரத்திற்கும் இடையே அந்த கார் சிறிது நொடிகள் நம் கண்ணாடியில் தெரியாமல் போகும். இதற்கு காரணம் அந்த நேரம் அந்த காரின் பிம்பம் நம் ரியர் வியூ மிர்ரரின் வெளிப்புற ஓரத்தில் விழுந்திருக்கும். அதை சரியாக அட்ஜஸ்ட் செய்யாத கண்ணாடியில் நம்மால் பார்க்க முடியாது. அந்த இடத்தை கண்ணாடியின் "பிளைன்ட் ஸ்பாட்' அல்லது "பெஸ்க்கி ஸ்பேஸ்' என்று குறிப்பிடுவர். இவ்வளவு பெரிய வாகனம் நம்மை கடக்கையில் எப்படி நம்மால் முன்கூட்டி பார்க்க முடியவில்லை என்பது ஆச்சரியமாய் இருக்கும். இம்மாதிரி சமயங்களில் நாம் உட்புற கண்ணாடியில் பார்த்த வாகனம் பின்புறம் தானே வருகிறதென்று வலப்புறமாக நகர்ந்தால் பின்புறம் நம்மை கடக்க முயலும் வாகனம் பாதி கடந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் விபத்து ஏற்படலாம். இந்த "பிளைன்ட் ஸ்பாட்' என்பது சில கார் கண்ணாடிகளில் பெரிய அளவிற்கும் தோன்றும். எனவே கார் கண்ணாடியை பின்புறம் நம் அருகே வரும் வாகனம் தெரியம் வண்ணம் சரியாக கவனித்து அட்ஜஸ்ட் செய்வது மிகவும் முக்கியம். ஹைவே டிரைவிங்கில் இந்த சிறு பாதுகாப்பு முறை பெரிய ஆபத்தை தவிர்க்க உதவும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)