பதிவு செய்த நாள்
31 ஜன2013
12:40
உலகளவில், சொகுசு கார்களுக்கு அடுத்தகட்டமாக, சூப்பர் கார்கள் தான் வலம் வருகின்றன. சொகுசு மற்றும் வேகம் தான், இந்த கார்களின் தாரக மந்திரம். அந்த வகையில், சூப்பர் கார்கள் விற்பனை சந்தையில், பராரி, லம்போர்கினி நிறுவனங்களுக்கு போட்டியாக, ஆடி கார் நிறுவனமும் கலக்கி வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே, ஆடி ஆர்8 சூப்பர் காரை விற்பனை செய்து வந்தது. தற்போது, அதை நன்கு மேம்படுத்தி, புதிய காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், மூன்று வேரியன்ட்களில், (வி8, வி10 வி8 கன்வர்ட்டபிள்) கிடைக்கும். இந்த காரின் விலை, ரூ.1.35 கோடியில் துவங்கி, ரூ.1.74 கோடி வரை உள்ளது. முன்பு, ஆர்8 சூப்பர் காரில், ஆர்- டிரானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதி இருந்தது. புதிய காரில், எஸ்- டிரானிக் டூயல் கிளெச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதி இடம் பெற்றுள்ளது. வி8 வேரியன்ட் கார், 100 கி.மீ., வேகத்தை, 4.3 வினாடிகளில் தொட்டு விடும்; அதிகபட்சமாக, மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் செல்லும். வி10 வேரியன்ட் கார், 100 கி.மீ., வேகத்தை, 3.6 வினாடிகளில் தொட்டு விடும்; அதிகபட்சமாக, மணிக்கு, 340 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த கார், வெளிநாட்டில், முழு காராக உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. காரின் முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி., விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|