பதிவு செய்த நாள்
01 பிப்2013
00:15

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான இலக்கை எட்டுவது கடினம் என, தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில், பாசுமதி அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்திய பாசுமதி அரிசிக்கு, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளிட்டவை முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன.
சர்வதேச அளவில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும், இந்திய பாசுமதி அரிசியின் விலை அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு டன் பாசுமதி அரிசியின் விலை, 800 டாலரிலிருந்து, 1,000 டாலராக உயர்ந்துள்ளது. இதனால், மேற்கண்ட நாடுகள், இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி வாங்குவதை குறைத்து வருகின்றன.நடப்பு பருவத்தில், பாசுமதி அரிசி உற்பத்தி, 57 லட்சம் டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற நிதியாண்டில், இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, 32 லட்சம் டன்னாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில், 40 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விலை உயர்வு காரணமாக, இதன் ஏற்றுமதி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 25 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த, ஒன்பது மாத காலத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 25 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 22 லட்சம் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|