பதிவு செய்த நாள்
01 பிப்2013
00:17

மும்பை:உள்நாட்டில், அதிகளவில் வெங்காயம் உற்பத்தியாகும், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில், போதிய அளவிற்கு மழை இல்லாததால், சில மாவட்டங்களில், வறட்சி நிலவுகிறது. இதனால், இதன் உற்பத்தி, குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, தற்போது, வெங்காயத்தின் விலை, உயர்ந்துள்ளது.
நாசிக் சந்தை:இந்த விலை உயர்வு என்பது, தற்காலிகமானது தான். மேற்கண்ட மாநிலங்களின், இதர மாவட்டங்களில், இதன் உற்பத்தி, அதிகரிக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. எனவே, இதன் விலை, படிப்படியாக குறையும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.ஆசியாவின் மிகப் பெரிய சந்தையாக நாசிக்கில் உள்ள லசல்கான் திகழ்கிறது. இங்கு, ஒரு கிலோ, வெங்காயத்தின் விலை, 20.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 3.55 ரூபாயாக இருந்தது.நாசிக் சந்தையில், இதன் விலை உயர்ந்ததையடுத்து, நாடு தழுவிய அளவில், சில்லரை விற்பனையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
உற்பத்தி:இருப்பினும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, இதன் உற்பத்தி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, நடப்பாண்டில், வெங்காயம் உற்பத்தி, கடந்த ஆண்டில் உற்பத்தி ஆன, 1.74 கோடி டன் அளவிற்கே இருக்கும். இதனால், வெங்காயத்திற்கு பற்றாக்குறை ஏற்பட வாயப்பில்லை.உள்நாட்டில், நடப்பாண்டில், வெங்காயம் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் குறைந்துள்ளது. என்றாலும், இதன் உற்பத்தி, அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதன் விலை குறையும் என, நாசிக்கில் அமைந்துள்ள, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி:நாட்டின் பல மாநிலங்களில், சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில், இதன் விலை, 13 ரூபாயாக இருந்தது.இந்நிலையில், டில்லி மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித், வெங்காயம் ஏற்றுமதியை கட்டுப் படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|