பதிவு செய்த நாள்
01 பிப்2013
00:18

மும்பை:தனியார் துறையை சேர்ந்த பெடரல் பேங்க், எச்.டீ.எப்.சி., ஆகிய வங்கிகள், வாகன கடனுக்கான வட்டியை, 0.50 - 0.75 சதவீதம் வரை குறைத்துள்ளன.ரிசர்வ் வங்கி, கடந்த செவ்வாயன்று வங்கிகளுக்கான, "ரெப்போ' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களை, 0.25 சதவீதம் குறைத்தது. மேலும், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.,) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால், வங்கித் துறையில் கூடுதலாக, 18 ஆயிரம் கோடி ரூபாய், புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இந்நடவடிக்கையை தொடர்ந்து, பெடரல் பேங்க் வாகன கடனுக்கான வட்டியை, 11.20 சதவீதத்தில் இருந்து, 10.45 சதவீதமாக குறைத்துள்ளது. எச்.டீ.எப்.சி.பேங்க், வாகன கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதன்படி, கனரக வாகனக் கடனுக்கான வட்டி, 11 சதவீதமாகவும், இலகு ரக வாகன கடனுக்கான வட்டி, 13.75 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கார் கடனுக்கான வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, தவணைக்கேற்ப, 10.50 - 11.50 சதவீத வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இருசக்கர வாகன கடனுக்கான வட்டி, 0.50 சதவீதம் குறைக்கப்பட்டு, 19.25 - 22.25 சதவீத வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.டீ.பீ.ஐ. ஆகிய வங்கிகள், அவற்றின் அடிப்படை வட்டி விகிதத்தை, தலா, 0.25 சதவீதம் குறைத்து உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|