தங்கம் விலை உயர்வுதங்கம் விலை உயர்வு ... ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
வர்த்தகம் » ஜவுளி
ஜவுளி ஏற்றுமதி ரூ.10.27 லட்சம் கோடியாக சரிவு உள்நாட்டில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:20

நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 8.19 சதவீதம் சரிவடைந்து, 10.27 லட்சம் கோடி ரூபாயாக (18,679 கோடி டாலர்) குறைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 11.19 லட்சம் கோடி ரூபாயாக (20,346 கோடி டாலர்) இருந்தது என, மத்திய ஜவுளி அமைச்சகம், வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா:கடந்த 2008ம் ஆண்டு, சர்வதேச அளவில் ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடியில் இருந்து, நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி மிகவும் குறைந்து போயுள்ளது. இதை கருத்தில் கொண்டு, துணி உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், உள்நாட்டு விற்பனையில், அதிக கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன. நடப்பு நிதியாண்டில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இந்திய ஆடைகளுக்கான தேவை, கடந்த ஆண்டை விட, 15-20 சதவீதம் உயர்ந்திருந்தது.இருப்பினும், பண்டிகை காலத்திற்கு பிறகு, மேற்கண்ட நாடுகளில், இந்திய ஜவுளிகளுக்கான தேவை குறைந்ததை அடுத்து, ஆர்டர்கள் வரத்தும் குறைந்துள்ளது என, இந்திய ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய துணி மற்றும் ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தவிர, இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மேலும், பல நிறுவனங்கள், உள்நாட்டுச் சந்தையில், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில், நடவடிக்கை எடுத்து வருவதாக, இந்திய துணி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ராகுல் மேத்தா தெரிவித்தார். பங்களிப்பு:நாட்டின், ஒட்டுமொத்த ஏற்றுமதியில், கணக்கீட்டு காலத்தில், ஜவுளி ஏற்றுமதியின் பங்களிப்பு, 10 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின், இதே காலத்தில், இதன் பங்களிப்பு, 10.12 சதவீதமாக இருந்தது.இதுகுறித்து, ராகுல் மேத்தா மேலும் கூறியதாவது:கடந்த, 2008ம் ஆண்டிற்கு பிறகு, இந்தியாவில் உள்ள பல ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதியை விட, உள்நாட்டு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன. குறிப்பாக, எங்கள் நிறுவனத்தின் வருவாயில், 35 சதவீதம் உள்நாட்டு விற்பனையில் வாயிலாக பெறப்படுகிறது. இதற்கு முன், ஏற்றுமதியில் தான், முழு கவனம் செலுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு அவர் கூறினார். ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், உள்நாட்டில் அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், புதிய உத்திகளை அமல்படுத்தி வருகின்றன.இதுகுறித்து, கெயிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், ஆடைகள் மேம்பாட்டு கவுன்சிலின் முன்னாள் தலைவருமான, பிரமல் உதானி கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய ஜவுளி துறையின் போக்கு முற்றிலுமாக மாறியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தையில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கான தேவை குறைந்ததை அடுத்து, உள்நாட்டு விற்பனையை அதிகரிக்கும் வகையில், இத்துறை நிறுவனங்கள் ஈடுபடத் துவங்கிஉள்ளன. வருவாய்:கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முற்றிலும் ஏற்றுமதியை சார்ந்து இருந்த பல நிறுவனங்கள், இன்று, அவற்றின் மொத்த விற்றுமுதலில், 25-30 சதவீத வருவாயை, உள்நாட்டு விற்பனை வாயிலாக பெற்று வருகின்றன. உள்நாட்டு சந்தையும், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், மத்திய அரசு, தாய்லாந்து நாட்டுடன், தடை இல்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிலையில், அந்நாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியில், 30 சதவீதம் அளவிற்கு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையை சேர்க்க வேண்டும்.இல்லாவிடில், அந்நாட்டின், ஆடைகள் இறக்குமதியால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என, இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)