பதிவு செய்த நாள்
01 பிப்2013
09:19

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.85 புள்ளிகள் அதிகரித்து 19937.83 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23.90 புள்ளிகள் சரிந்து 6010.85 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தனர்.இதையடுத்து, "சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.55 சதவீத சரிவுடன் முடிவடைந்தது. முன்னணி நிறுவன பங்குகளின் நிதி நிலை முடிவுகள், எதிர்பார்த்த அளவிற்கு நன்கு இல்லாததால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கம் கண்டது. அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது நேற்றைய வியாபாரத்தில், வங்கி, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|