பதிவு செய்த நாள்
01 பிப்2013
15:07

சாகச பயணம் விரும்புபவர்கள், தனிரகமாக காட்சி அளிப்பர். தன்னந்தனியாக, ஊர் சுற்றி வர விரும்புவர்கள் இவர்கள். இவர்களுக்கு தேவையான உபகரணங்களை, செகந்திராபாத்தை மையமாக கொண்டு செயல்படும், " வியாடெரா' நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது, "வியாரெடா கிளா' என்ற பைக் லக்கேஜ் பேக்கை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. இந்த பேக், உயர்தர டெனியர் சிந்தடிக் இழையால் உருவாக்கப்பட்டது. 55 லிட்டர் கொள்ளளவு வசதி கொண்டது. பேக்கின் வெளிப்புறத்தில், மூன்று பாக்கெட்கள் உள்ளன. பைக்கின் பின் புறத்தில் பொருத்துவதற்கு தோதாக, பேக்கில் மூன்று ஸ்டார்ப்கள் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக, கயிறு மூலம் கட்டுவதற்கு, நான்கு மெட்டல் ரிங்குகளும் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, பேக்கின் வெளிப்புறத்தில், வாட்டர் பாட்டில் வைத்து கொள்ள வசதியும் உண்டு. தேவைப்பட்டால், பைக்கில் இருந்து தனியாக பிரித்து எடுத்து, தோளில் சுமந்து கொண்டு செல்லும் வசதியும், இந்த பேக்கில் உண்டு. "வியாடெரா' நிறுவன இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|