பதிவு செய்த நாள்
02 பிப்2013
01:45

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், இரண்டு மாதங்களுக்குப் பின், விமான எரிபொருள் விலையை, 2 சதவீதம் உயர்த்தியுள்ளன. இது, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.உள்நாட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பீ.பி.சி.எல்.,), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) ஆகிய மூன்று நிறுவனங்கள், விமானச் சேவை நிறுவனங்களுக்கு, எரிபொருளை சப்ளை செய்து வருகின்றன.
விலை உயர்வுக்குப் பின், டில்லியில், விமான எரிபொருள் விலை, கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டர்), 1,324 ரூபாய் உயர்த்தப்பட்டு, 67,561 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையில், இதன் விலை, 68,447 ரூபாயிலிருந்து, 69,827 ரூபாயாகவும், சென்னையில், விமான எரிபொருள் விலை, 72,057 ரூபாயிலிருந்து, 73,516 ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|