நீர்போக உருளைக்கிழங்கு சாகுபடியில் அதிக லாபம் நீர்போக உருளைக்கிழங்கு சாகுபடியில் அதிக லாபம் ... உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி 3.9 சதவீதமாக சரிவு உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி 3.9 சதவீதமாக சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அசோக் லேலண்டு, டி.வி.எஸ்., மோட்டார் வாகன விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:15

புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இருப்பினும், அசோக் லேலண்டு, பஜாஜ் ஆட்டோ மற்றும் டி.வி.எஸ். மோட்டார் ஆகிய வற்றின் வாகன விற்பனையில் முன்னேற்றம் காணப்பட்டது.மோட்டார் சைக்கிள்இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின், ஒட்டு மொத்த வாகன விற்பனை, 1.39 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 1,75,931 ஆக உயர்ந்துள்ளது.
இது, கடந்த 2012ம் ஆண்டு, இதே மாதத்தில், 1,73,514 ஆக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின், மொத்த இருசக்கர வாகன விற்பனை, 1,71,112 லிருந்து, 1,71,513 ஆக சற்று அதிகரித்துள்ளது. இதே போன்று, உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 1,53,104 லிருந்து, 1,54,107 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை, 41,469 என்ற எண்ணிக்கையிலிருந்து, 37,946 ஆக சரிவடைந்து உள்ளது.
இதே போன்று, மோட்டார் சைக்கிள் விற்பனையும், 65,608 லிருந்து, 64,555 ஆக குறைந்து உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகன ஏற்றுமதி, 11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 18,610 என்ற எண்ணிக்கையிலிருந்து, 20,723 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதனை பிரதிபலிக்கும் வகையில், கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 2,402 ஆக இருந்த மூன்று சக்கர வாகன விற்பனை, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், 4,418 ஆக உயர்ந்துள்ளது.
அசோக் லேலண்டு:வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், அசோக் லேலண்டு நிறுவனம், சென்ற ஜனவரி மாதத்தில், 10,561 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டில், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (10,300 வாகனங்கள்) விட, 2.53 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் "தோஸ்த்' வர்த்தக வாகன விற்பனை, 200 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,100 என்ற எண்ணிக்கையிலிருந்து, 3,698 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இதர வர்த்தக வாகனங்களின் விற்பனை, 25 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 9,200 லிருந்து, 6,863 ஆக சரிவடைந்துள்ளது.ரெனோ இந்தியாசென்ற ஜனவரியில், ரெனோ இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 5 மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 4,914 ஆக உயர்ந்து உள்ளது. இது, கடந்த, 2012ம் ஆண்டின், இதே மாதத்தில், 885 ஆக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், இதன் "டஸ்டர்' கார் விற்பனை, 3,554 ஆகவும், "ஸ்கேலா' கார் விற்பனை, 812 ஆகவும் இருந்தது.
இது தவிர, "பல்ஸ்', "புளுயன்ஸ்' உள்ளிட்ட கார்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்தது.பஜாஜ் ஆட்டோ நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய இருŒக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, சென்ற ஜனவரியில், 3,01,361 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்த 2012ம் ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (2,94,439 வாகனங்கள்) விட, 2.35 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், மூன்று Œக்கர வாகனங்கள் விற்பனை, 6.51 சதவீதம் உயர்ந்து, 43,436 என்ற எண்ணிக்கையிலிருந்து, 46,263 ஆக அதிகரித்து உள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதியும், 9.82 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,16,996 லிருந்து, 1,28,482 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை, 2.89 சதவீதம் அதிகரித்து, 3,37,875 என்ற எண்ணிக்கையிலிருந்து, 3,47,624 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)